திமுக-வுக்கு ஏன் ஹிந்துக்கள் மீது இவ்வளவு வெறுப்பு

திமுக-வுக்கு ஏன் ஹிந்துக்கள் மீது இவ்வளவு வெறுப்பு

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்.
[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்
[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்
[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.