திமுக ஹிந்து விரோதி தான் - பொதுமக்கள் கொதிப்பு

திமுக ஹிந்து விரோதி தான் - பொதுமக்கள் கொதிப்பு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மிகவும் கேவலமாக வீரமணி பேசினார். சாத்தூர் ராமச்சந்திரனும் விபூதி இட்டுக்கொண்டே ஹிந்துக்களை ஏமாற்றிவிடலாம் என்று பொது இடத்திலேயே சொன்னார்.

சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட்கள் நடந்துக்கொண்டு விதம் அனைவருமே அறிவார்கள். ராமர் பாலத்தை இடிக்க காங்கிரஸ் திமுக பெரிய பிரயத்தனம் செய்தார்கள். 

ஹிந்துக்களின் பூநூலை அறுத்தது, பிள்ளையார் சிலைகளை உடைத்தது, தீ மிதிப்பது காட்டு மிராண்டித்தனம் என்று சொன்னது, ஆண்டாளை அவமதித்தவர்க்கு ஆதரவு தந்தது, திருப்பதி கோவிலை கிண்டல் செய்தது என திமுகவின் ஹிந்து விரோத நடவடிக்கைகளை சொல்ல ஒரு பதிவு பத்தாது.

கோவை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களும் திமுக ஆதரவு கட்சியில் உள்ளார்கள். வெளிப்படையாகவே வன்மம் பேசும் இவர்களை திமுக ஊக்குவித்து வருகிறது.

தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுபடுத்திவரும் வீரமணி, திருமாவளவன், சுப வீரபாண்டியன் மீது ஒரு கண்டனம் கூட இல்லை. 

விநாயக சதுர்த்தி, விஜயதசமி விடுமுறை தினம் என்று குறிப்பிடும் திமுக, ஹிந்து விரோதி தான் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். 

பல ஆண்டுகளாக எந்த அரசியல் நிலைப்படும் எடுக்காத பல ஆன்மீக அமைப்புக்கள், இந்த முறை திமுக கூட்டணி வீழ்த்தப்பட்ட வேண்டும் என்றே விரும்புகின்றனர்