தியாகராஜ ஆராதனை விழா

தியாகராஜ ஆராதனை விழா

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் 172 வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்தது. ஆராதனையின் நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.