தியாகராஜ ஆராதனை விழா - 2019

தியாகராஜ ஆராதனை விழா - 2019

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் 172வது  ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஐந்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து கர்நாடக சங்கீத கலைஞர்கள் திருவையாறில் குழுமி வருகிறார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 'பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்' இசைக்கும் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.