திராவிட முன்னேற்ற கழகம் (எ) திமுக-வால் தமிழகத்திற்க்கு வந்த பெருங்கேடுகள்

திராவிட முன்னேற்ற கழகம் (எ) திமுக-வால் தமிழகத்திற்க்கு வந்த பெருங்கேடுகள்

1) தாங்கள் சாகும் வரை பிரிட்டீஸ்க்காரன் பிரித்தாளும் கொள்கையான திராவிட இனக் கொள்கையை கைவிடாமல் காம இட்சையை தூண்டும் வகையிலே மேடையிலும் தமிழக சட்டமன்றத்திலும் பேசியவர்கள் திமுக-வினர்.

2) அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று சொல்லியே கேடு செய்தவர்கள் திமுக-வினர்.

3) தனது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பரிசு சீட்டு ( லாட்டரி சீட்டை)அறிமுகப்படுத்தி பரிசு விழுந்தால் வீட்டிற்க்கு,விழாவிட்டால் நாட்டுக்கு என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழனை லாட்டரி சீட்டு மயக்கத்திற்க்கு ஆட்படுத்தி பாமர தமிழனின் இரத்தத்தை சில்லறையாக உறிஞ்சியவர்கள் திமுக-வினர்.

4) ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்து அதனால் தமிழகத்திற்க்கு நல்லது செய்த பெருந்தலைவர் காமராஜரையே தோற்க்கடித்து அந்த வாக்குறிதியை நிறைவேற்றாமல் பாமர தமிழக மக்களை அடியோடு ஏமாற்றியவர்கள் திமுக-வினர்.

5) தேர்தல் பிரச்சார வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் "ஒரு படி நிச்சயம் மூன்றுபடி இலட்சியம்" என்று அடுக்கு மொழியில் எதுகை மோனையில் பேசி தமிழ் மக்களை அப்பட்டமாக ஏமாற்றியவர்கள் திமுக-வினர்.

6) பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக்கொள்கை என்னும் ஏமாற்றுக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானம் ஆக்கி, ஆங்கிலத்தை கட்டாயமாக்கி தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல் தாய்மொழி என்று மாற்றி முதல் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை தமிழகத்தில் தமிழை ஒழித்துக்கட்டியவர்கள் திமுக-வினர்.

7)பெருந்தலைவர் காமராஜர் ஐயா  அவர்களால் அரும்பாடுபட்டு,மக்களிடம் மடியேந்தி தொடங்கப்பட்ட தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை திட்டமிட்டே குறைத்து அரசு பள்ளிகளின் நிர்வாகத்தை சீரழித்து,தனியார் பள்ளிகள் எனப்படும் மெரிக்குலேஷன் கட்டணப்  பள்ளிகளை ஊக்குவித்து அவற்றை தமிழகம் முழுக்க தொடங்கச்செய்து முதல் முதலில் தமிழகத்தில் கல்விக் கொள்ளையை அறிமுகம் செய்தவர்கள் திமுக-வினர்.

8) ஆங்கிலேய பிரிட்டீஷ்காரன் விஷ்வாசத்தால் தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளி எனப்படும் தனியார் பள்ளிகளை  தொடங்கும் அங்கீகாரத்தை கிருத்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே  வழங்கியவர்கள் திமுக-வினர்.

9)ஈவேரா தமிழகத்திற்க்கு எவ்வளவு கேடுகளை செய்தாரோ அதில் எள் முனை  அளவும் குறையாமல் கேடு செய்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் எனப்படும் திமுக..!

" திராவிடத்தின் வீழ்ச்சியே தமிழகத்தின் எழுச்சி".