திரிணமூல் மூத்த தலைவர் அர்ஜுன் சிங் பாஜகவில் இணைந்தார்

திரிணமூல் மூத்த தலைவர் அர்ஜுன் சிங் பாஜகவில் இணைந்தார்

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல் ராய் ஆகியோர் தலைமையில் அர்ஜுன் சிங், பாஜகவில் இணைந்தார்.  

நான் 30 ஆண்டுகளாக மம்தா பானர்ஜிடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துகள் எனக்கு மிகுந்த அதிருப்தியை அளித்தன. இந்திய விமானப்படை பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தபோது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை என்ன? என்று அவர் கேட்டது, இந்த விஷயத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை வெளிக்காட்டியது. தேசநலனில் அக்கறை இழந்துவிட்ட தலைவரை நம்பி, இனிமேலும் மக்களிடம் வாக்குக் கேட்டுச் செல்ல முடியாது. எனவே, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன் என்றார். 

இதனையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவருமான அர்ஜுன் சிங், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளது,மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, அக்கட்சி எம்.பி. அனுபம் ஹஸ்ரா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.