திரிபுராவில் பாஜக மகத்தான வெற்றி

திரிபுராவில் பாஜக மகத்தான வெற்றி

திரிபுராவின் 67 உள்ளாட்சி தொகுதிகளுக்கு நடந்த இடை தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட 67 இடங்களில் பாஜக 66 இடங்களை கை.பற்றியுள்ளது. தலைநகர் அகர்தலாவின் நான்கு வார்டுகளையும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களின் வளார்ச்சிக்கு மத்திய பாஜக அளித்துவரும் முக்கியத்துவத்திற்கு கிடைதத வெற்றி என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.