"திருபுவனத்தில் H ராஜா"

"திருபுவனத்தில் H ராஜா"

மத மாற்றம் குறித்து கேள்வி கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர் பேசியது நியாயமாக தான் பேசி உள்ளார். கொலை குற்றவாளிகளை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.

நான் ராமலிங்கம் வீட்டுக்கு செல்லும் வழியை போலீசார் தடை செய்தனர். மாற்று வழியில் செல்லும் நிலைமை ஏற்பட்டது. கொலை குற்றவாளிகளை போலீசார் பதுக்கி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.

தமிழகத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் குரல்கொடுக்க மாட்டார்கள். ராமலிங்கம் கொலையை கண்டித்து இவர்கள் ஏதும் கூறவில்லை. திராவிட கட்சிகள், இந்து மதத்தை அழிக்கும் செயலை செய்து வருகின்றன.

கேரளாவில் நடந்த தேர்வில் இஸ்லாமிய மதம் குறித்த கேள்வியை தயாரித்த ஜோசப் என்பவரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது. இதேபோல் தான் ராமலிங்கத்தின் கொலையும் நடந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

காவல் துறையின் எதிர்ப்பை மீறி வேறு வழியில் ராமலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும் இப்படுகொலையை கண்டித்து வருகின்ற திங்கட்கிழமை (11/02/2019) அன்று திருபுவனத்தில் பாஜக மற்றும் ஹந்து சமுதாய அமைப்பு இணைந்து பந்த் நடத்த முடிவு.