திருப்பூர் தான் பர்ஸ்ட்

திருப்பூர் தான் பர்ஸ்ட்

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் துரிதகடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பரில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தமிழகத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் தேர்வாகியிருந்தது. இந்த  திட்டத்தின் நிறைவு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது திருப்பூரில் தான் நாட்டிலேயே மிக அதிக அளவாக  25 முகாம்கள் நடத்தி மிக அதிக தொகையான ரூ.102 கோடி அளவிற்கு இந்த திட்டத்தின் கீழ் உடனடியாக கடன் வழக்கப்பட்டுள்ளது. தெரிய வந்துள்ளது.