திருமண பத்திரிகை மூலம் பா.ஜ.,வுக்கு ஓட்டு சேகரிப்பு

திருமண பத்திரிகை மூலம் பா.ஜ.,வுக்கு ஓட்டு சேகரிப்பு

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும்படி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகளின் திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, உறவினர்களுக்கு வழங்கி வருகிறார்.

அழைப்பிதழ் உறையின் மேல், 'என் மகளின் ஆசிர்வாதத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்' என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளார். என் மகளில் திருமண அழைப்பிதழ் விவகாரத்தில், நாட்டு நலனை தவிர, எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. மோடியை விட சிறந்த தலைவர் யாரும் இல்லை. மற்ற தலைவர்கள் தங்களை பற்றியே சிந்திக்கும் போது, மோடி மட்டுமே, நாட்டைப் பற்றி யோசிக்கிறார். எனவே, மக்கள் அவருக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும் என்று பீஹார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் உள்ள காலா கிராமத்தைச் சேர்ந்த அசோக் சிங் கூறினார்.