திரையில் நாயகன்  தரையில்  கோமாளி

திரையில் நாயகன் தரையில் கோமாளி

இன்றைய நாளில் சமூகத்தில் திடீர் போராளிகள் உருவாகியுள்ளனர். இவர்கள் திரையில் தோன்றுவதால் தரையில் கால் வைத்து நடக்காமல் காற்றிலே பறக்க பகற்கனவு காண்கின்றனர். தங்களின் சுய விளம்பரத்திற்காக   கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளுக்கு தற்போது கருத்துகூறி தங்களை எப்போதும் ஊடகவெளிச்சத்திலேயே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். 

தங்கள் படங்கள் நன்றாக ஓடவேண்டும் என்பதற்காகவும், தோல்வி படங்களை மறைப்பதற்காகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுகின்றனர்    . தங்களின் சுய லாபத்திற்காக இத்தகைய இழிவான செயல்களில்   ஈடுபட்டுவருகின்றனர் . இவர்களுக்கு பொது மக்களின் சார்பாக நியூஸ் TN வாயிலாக   சில கேள்விகள் இருக்கின்றன.   

சமீபத்தில் தன்னுடைய  படத்தை  விளம்பரபடுத்தும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, காந்தியை கொன்ற கோட்ஸே வெறும் துப்பாக்கி தான் அதற்க்கு பின்னால் ஒரு சித்தாந்தம் இருப்பதாக கூறினார்.  

காந்தி கொலையை பற்றி மட்டும் கவலை கொள்ளும் சூர்யா, முதல் இந்திய ராணுவத்தை தொற்றுவித்த நேதாஜி கொலையை பற்றி பேசாதது ஏன்?  நேதாஜி கொலைசெய்யபட்டதற்கு பின்னே என்ன சித்தாந்தம் இருந்தது.  உயிரோட சென்ற அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை கொன்று உடலாக கொண்டு வந்ததற்கு பின்னே இருந்த சித்தாந்தம் என்ன?  இந்திய ஒற்றுமைக்காக காஷ்மீர் சென்ற ஷியாம பிரசாத் முகர்ஜியை  கொன்றதன் பின்னே இருந்த சித்தாந்தம் என்ன.?    

ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட தீன் தயாள் உபாத்யாயா  கொல்லப்பட்டதன் பின்னே இருந்த சித்தாந்தம் என்ன?    சமூகம் குறித்து  கவலை கொள்ளும் திரை போராளிகள் இதை பற்றியெல்லாம் பேசுவார்களா? அவர்களால் பேசத்தான் முடியுமா!    

தமிழகத்தை சார்ந்த எண்ணற்ற ஹிந்து இயக்க தலைவர்கள் ஜிஹாதிகளால் கொல்லப்பட்டபோது இவர்கள் அமைதி காத்தது ஏன்?   ஆதிக்க சக்திகளாலும் மத வெறியர்களாலும் அப்பாவி ஹிந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும்,  அவர்களின் குடும்பத்தாரின் வாழ்வு நசுக்கப்பட்டபோதும்  உறங்கிகொண்டிருந்தாரோ போராளி சூர்யா.    

அப்போதெல்லாம் வாழ்மூடி அமைதி காத்து இப்போது மட்டும் சமூக நலன் வர காரணம் என்ன?   பொதுவுடைமை பேசும் வங்கத்திலும் கேரளத்திலும்  ஹிந்து சகோதரர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.  ஹிந்துக்களை ஒட்டுமொத்தமாக கொள்வதுதான் இவர்களது பொதுவுடமை போலும் இதை பற்றி பேச இவர்களின் நாவிற்கு துணிவு உண்டா?    

நடுநிலையாளர்கள்  என்ற போர்வையில் இவர்கள் ஒரு தரப்பை உயர்த்தி பிடிப்பதன் நோக்கம் லாபம் அன்றி வேறேதும் இல்லை.  இவர்களின் நாட்டு பற்றும் சமூக நோக்கும்  இவர்களின் படங்களிலேயே கண்ட மக்கள் இவர்களின் பேச்சை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனம். 


- நியூஸ் TN (ஆசிரியர் குழுமம் )