திரையுலக பிரபலங்கள் அபினந்தனுக்கு சல்யுட்

திரையுலக பிரபலங்கள் அபினந்தனுக்கு சல்யுட்

இந்திய விமானப்படையை சேர்ந்த அபினந்தன் வர்தமான் நேற்று பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். அவரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் நாடே உன்னுடன் தான் இருக்கிறது என தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். 

சூர்யா : விங் கம்மண்டேர் அபினந்தன் வர்தமானுக்கு ஒரு சல்யுட. அவர் பத்திரமாக திரும்பி வர பிராத்திக்கிறோம் இந்திய நாடே உன்னுடன் இருக்கிறது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கார்த்தி : காற்று வெளியிடை படத்திற்கு எனக்கு பயிற்சி அளித்தது விங் கமான்டர் அபினந்தன் வர்தமான் அவரின் தந்தை தான். அவருடன் சேர்ந்து விமானப்படையில் சிலருடைய அனுபவங்கள் கிடைத்தன. அபினந்தன் பாதுகாப்பாக திரும்ப பிராத்திக்கிறேன் என கார்த்தி பதிவிட்டுள்ளார்.

விஷால் : எனது ஹீரோ அபினந்தனுக்கு ஒரு சல்யுட். அவரது வீரமும் தைரியமும் அனைவருக்கும் முன்னுதாரணம். இந்திய விமானப்படையின் விமானிகள் அனைவரையும்  இருகரம் கூப்பி வணங்குகிறேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சித்தார்த் : பயங்கரவாதிகள் நமது வீரர்களை வீழ்த்தினர். நாம் அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழித்தோம். இப்போது நம் விமானியை சிறைபிடித்துள்ளார்கள்.பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. இந்தியா ஆதரிக்கவில்லை. இது ராஜதந்திரம் அல்ல. என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.