தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். நெல், கரும்பு முதலான விளைபொருட்களுக்கு ஆதர விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்றும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மோடி அரசுக்கு எதிராக அவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.  பின்னர் அவர்கள் மண்டை ஓடு எலும்புகளுடன் ராம்லீலா மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

நாளை பேரணியும் நாடாளுமன்றம் முன்பு நெல் கொட்டும் போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.