திஹார் சிறையில் சிவகுமார்

திஹார் சிறையில் சிவகுமார்

பணமோசடி  வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரசை சார்ந்த முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த 3 ஆம் தேதி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகுமார் 14 நாட்கள் நீதிமன்ற  காவலில்  இருந்தார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உடல்பரிசோதனை ஆய்வுகள் செய்யபட்டபின் இன்று திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரமும் திஹார் சிறையில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.