தி.க., வீரமணிக்கு எதிராக சென்னையில் போராட்டம்

தி.க., வீரமணிக்கு எதிராக சென்னையில் போராட்டம்

'ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவோருக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என, ஹிந்து மக்கள் பாதுகாப்பு படை சார்பில், உறுதிமொழி எடுக்கப்பட்டது.சென்னை, மயிலாப்பூரில், நேற்று, ஹிந்து மக்கள் பாதுகாப்பு படை சார்பில், பொதுக்கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

அதில், அந்த அமைப்பின் தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான, எஸ்.கே.சாமி, இந்தியாவில் பிறந்தவர் அனைவரும், ஹிந்துக்கள் என்ற கோட்பாட்டுடன், ஜாதி, மத பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.தமிழகத்தில், திராவிடன் என்ற வார்த்தையை பயன்படுத்துவோர், ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் அவதுாறாக பேசி வருகின்றனர்.தி.க., தலைவர், வீரமணியும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினும், தொடர்ந்து அவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மலிவான விளம்பரம்சமீபத்தில், கடவுள் கிருஷ்ணரை பற்றி, வீரமணி அவதுாறான கருத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு, ஹிந்து மக்கள் சார்பில், கண்டனம் தெரிவித்திருந்தோம்.அவர், இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், அவர், தொடர்ந்து சவால் விடும் வகையில் பேசி, மலிவான விளம்பரம் தேடிக் கொள்கிறார்.ஸ்டாலின், மதசார்பற்ற கட்சி எனக் கூறியபடியே, ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். எனவே, ஹிந்து மக்கள் அனைவரும், தி.மு.க., கூட்டணியை, 'டிபாசிட்' இழக்க செய்வோம் என்ற உறுதிமொழியை, அக்னி சாட்சியாக, இன்று எடுத்துக் கொண்டனர். இந்த எழுச்சியை ஊட்டியவர்கள் அவர்கள் தான்.இவ்வாறு, அவர் பேசினார்.