"தி.மு.க கூட்டணியில் இடமில்லை "

"தி.மு.க கூட்டணியில் இடமில்லை "

தி.மு.க கூட்டணியில் பா.ம.க மற்றும் வி.சி.களுக்கு இடமில்லை.

இரண்டு கட்சிகளையும் சேர்க்க மூத்த தலைவர்கள் எதிர்ப்பு.

தி.மு.க கூட்டணியில், பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்க்க, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இரு கட்சிகளையும் சேர்க்கக்கூடாது' என, தி.மு.க , மூத்த தலைவர்கள் பலர், கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பான, ஸ்டாலின் சமரசத்தையும் ஏற்க மறுத்து, அவருடன் காரசார விவாதமும் நடத்தியுள்ளனர். அதனால், குழப்பத்தை தவிர்க்கும் வகையில், இரு கட்சிகளுக்கும் இடமில்லை என்று அறிவிப்பு,தி.மு.க வில் இருந்து விரைவில் வெளியாகலாம் என, கூறப்படுகிறது.