தி.மு.க., கூட்டணியை புறக்கணிப்போம்

தி.மு.க., கூட்டணியை புறக்கணிப்போம்

ஹிந்து விரோத, தி.மு.க., அணியை புறக்கணிக்க வேண்டுமென, சிவனடியார்கள் நேற்று, திருப்பூரில், திருவாசகம் முற்றோதலுடன், பஞ்சபூத யாக பூஜை நடத்தினர்.

திருப்பூர், சந்திராபுரத்தில் உள்ள, ஆனிலையப்பர் சிவமடத்தில், நேற்று காலை, 7:00 முதல் மதியம், 1:30 மணி வரை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் குறித்து, சிவனடியார்கள் சிந்திக்கவே இல்லை. தற்போது, இந்து தர்மத்தை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தி, சிலர் அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு, புத்தி புகட்ட வேண்டிய நேரம், வந்து விட்டது.பண்டைய காலத்தில், நல்லரசு அமைய, பஞ்சபூத யாகம் நிகழ்த்துவர். அதேபோல், ஹிந்து தர்மம் காக்க, இம்மாதம் முற்றோதல் நிகழ்த்தப்படுகிறது. ஆன்மிக உணர்வுள்ள நல்லரசு அமைய, வேண்டுமெனில், ஹிந்துக்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகி வெற்றிவேல் கூறினார்.