தி.மு.க.வின் விளம்பர விஷ வித்து

தி.மு.க.வின் விளம்பர விஷ வித்து

வாக்கு கேட்டு பத்திரிக்கைகளில் கொடுத்துள்ள விளம்பரம், தி.மு.க. என்ற நச்சு பாம்பு தனது விஷத்தை கக்கியுள்ளது.  மதவெறி, இனவெறி, அதிகார வெறி, கலாச்சார வெறி, அடக்கி ஆளும் ஆணவ வெறி, ஆகியவற்றின் முழுவடிவமான பிஜே.பி.  என விளம்பரப்படுத்தியுள்ளது.  மதவெறிக்கு முழுமையான விளக்கத்தை கொடுக்க ஸ்டாலின் முன் வருவாரா?  யாரோ எழுதிக் கொடுத்ததை தப்பும் தவறுமாக பொது மேடைகளில் பேசும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின், 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த போது நடத்திய திருவிளையாடல்களில் கானப்பட்ட அதிகார வெறி, ஆணவ வெறி, அடக்கி ஆளும் ஆணவ வெறி முதலியவை வெட்ட வெளிச்சமாகியதை மீன்டும் கோடிட்டு காட்டினால் யார் என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும்.

          நம்முடைய மூலத்துவம் உள்ள சட்டம் தற்போது நம்மிடையே இல்லை.  நாம் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் இயங்குவதால் இந்த இழுக்கு ஏற்பட்டுள்ளது.  தமிழருடைய மூலத்துவம் உள்ள சட்டம் யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உள்ளது.  அதாவது யாழ்ப்பாணத்தில் எல்.டி.டி.இ.யினர் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் மூலத்துவம் உள்ள சட்டம் இருக்கிறது, இவ்வாறு திருவாய் மலர்ந்தவர் திருவாளர் பொதுச் செயலாளர் க.அன்பழகன்.  1952லிருந்து சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போதும், வெற்றி பெற்ற பின்னர் உறுதி மொழி எடுக்கும் போதும் இழுக்கு ஏற்படுத்தும் இந்திய அரசியல் சட்டத்தின் படி பதவி பிரமானம் எடுத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு அதிகார வெறி என்று கூறலமா.  

         கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியிலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜசோழன் காலத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஆக அரசியலிலும், தொழில்களிலும் முத்துவேலர் வம்சம் கொடி கட்டிப் பறக்கிறது. இதற்கு பெயர்தான் அதிகார வெறி என்பது.   எண்பதுகளில் இந்தியாவையே கபளீகரம் செய்த நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் கருணாநிதி. இந்தியா என்ன நேரு குடும்பத்தின் சொத்தா? என்றெல்லாம் கேட்டவரின் குடும்பம் நேரு குடும்பத்தையே விஞ்சி விட்டது. மகள், மகன், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என்று கிளம்பி வந்து தமிழகத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் குறுநில மன்னர்களோ அவர்கள் சக்திக்கு வட்டம், மாவட்டம், வட்டாரம் என்று பங்கு போட்டு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள், இதற்கு என்ன பெயர் வைக்கலாம் ஸ்டாலினே. அதிகார வெறி என்று பெயர் வைக்கலாம்.

        இவர்கள் முதன் முதலாக கைப்பற்றியது கேபிள் தொலைக்காட்சியை. திமுகவின் கட்சிப் பணத்தை எடுத்து பேரன்களுக்குக் கொடுத்து பூமாலை என்னும் வீடியோ பத்திரிகையைத் துவங்கினார் மாமன்னர். பின்னர்தான் அதிகாரமும் வந்து சேர, பூமாலை தன் வலையை விரித்து கேபிள் தொடங்கி இப்போது தென்னிந்தியாவையே 17 சேனல்களால் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தூர்தர்ஷனை உடைத்த கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் தூர்தர்ஷனை விட படுமோசமான நஞ்சு போதையை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றனஇதற்கு பெயர் கலாச்சார வெறி என்று கூறலாமா.

       இவர்களை மீறி எந்த ஒரு தொலைக்காட்சியும் கேபிள் வழி மக்களைச் சென்றடைய முடியாத நிலை. இவர்களை விமர்சித்து ஏதாவது நிகழ்ச்சி தயாரித்தால் அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடையாது. காரணம் 70% கேபிள் இணைப்புகளை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் வைத்திருக்கிறது. மீதியை அழகிரிக்குச் சொந்தமான நிறுவனம் வைத்திருக்கிறதுஇது கேபிள் தொலைக்காட்சியின் நிலை. வம்சங்களுக்கிடையில் பிளவு வந்த போது அரசுத் தொலைக்காட்சி துவங்கி உமசாங்கரை பொறுப்பாகப் போட்டு பின்னர் வம்சம் இணைந்ததும் அவரை பலிகடாவாக்கியதுதான் வம்சத்தின் இயல்பான குணம். வம்சம் பிரிந்த போது ஒரு தொலைக்காட்சிதான் இருந்தது. வம்சம் இணைந்த பின் செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல  சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.   இந்த குடும்ப ஆதிக்கத்திற்கு அதிகார போதை என்று கூறலாம்.

           கருணாநிதியின் மூத்த மகன் மு. முத்து குடிகாரராக இருந்த இவர் நீண்டகாலமாக கருணாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கூட கருணாநிக்கு எதிராக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பதவியேற்ற உடனேயே முத்துவை சேர்த்துக் கொண்டார். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி கொடி கட்டிப் பறக்கிறார்இன்றைய தேதியில் தமிழக விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை மிரட்டி வாங்கி பிரமாண்ட குடியிருப்புகளை அமைப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை மக்களை மிரட்டி வாங்கிக் கொடுப்பதும்தான் அறிவுநிதியின் தொழில். ஒரே நாளில் பல கோடி ரூபாய், இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் அறிவு நிதி சினிமாவிலும் அவ்வப்போது போலீஸ் மாமா கேரக்டரில் நடித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறார்.   முத்துவேலர் வம்சம் தழைத்தோங்கி செழித்தோங்கி ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆக்டோபஸ் போலப் படர்ந்திருக்கிறது. ஆனால் கருணாநிதி முன்னர் எப்போதையும் விட தனது வாரிசுகளை நினைத்து பெருமை கொள்கிற ஒரு தகப்பனாக வம்சத்தின் அரசனாக இருக்கிறார்.

       திருவாளர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் விளம்பரத்தில் காவிரி பிரச்சினை என குறிப்பிட்டுள்ளீர்கள்.  இதற்கு இன்று உங்களை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பேன் என சூழுரைத்த வை.கோ. எழுப்பிய கேள்விக்கு பதில் கூறவும்.    நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். எனக்கு ஒரு அணி வேண்டும். நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் நியாயம் சொல்லுங்கள். அவ்வளவுதான். இங்கே கூடியிருக்கிற இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து நான் கேட்கிறேன் நீங்கள் நியாயம் சொல்லுங்கள். எனக்கு காவிரிப் பிரச்சினையில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ஐந்தாண்டு காலம் மத்திய அரசு கெஜட்டில் போடாமல், அரசிதழில் வெளியிடாமலே தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததா? இல்லையா? ஒரு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு உடனே அரசிதழில் வெளியிட வேண்டுமா? இல்லையா? ஏன் வெளியிடவில்லை? கர்நாடகத்திற்கு ஆதரவாக தமிழனுக்குத் துரோகமாக இந்த மன்மோகன்சிங் அரசு நடந்ததா இல்லையா? கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

         இரண்டு மலையாள மீனவர்கள் கொல்லப்பட்டபொழுது, இத்தாலி அரசை நிர்பந்தப்படுத்திப் பணியச் செய்ததே? ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் செத்தார்களே, சுட்டுக் கொல்லப்பட்டார்களே! இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்? ராஜபக்சேவுக்கு எதிராக மன்மோகன் சிங் வாயிலிருந்து ஒரு கண்டனம் வந்ததுண்டா? ஐநூறுக்கும் மேற்பட்ட என் தமிழ் மீனவர்கள் செத்தார்கள். ஆனால், நீங்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரே நாளில் முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட என் குலமக்கள் கொன்றொழிக்கப் பட்டார்களே ராஜபக்சே அரசினால், அதற்குப் பின்னாலே இருந்து எல்லா கரும காரியங்களையும் செய்தது இந்த மன்மோகன்சிங்கினுடைய அரசுதானேஇதற்கு பதில் கூற ஸ்டாலின்  தயாரா என்ற கேள்வி எழுகிறது.   மோடி ஆட்சி செய்த ஐந்தாண்டு காலம் இலங்கை ராணுவத்தால் ஒரு தமிழக மீனவர்கள் கூட சுடப்படவில்லை என்பதை நினைத்து ஸ்டாலின் வருத்தப்படுகிறா.  அரசியல் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மோடி மீது குற்றம் சுமத்துவது.

     இனவெறியையும், சாதி வெறியையும் வளர்த்து விட்டவர்  கருணாநிதி.    சாதியை வளர்த்ததும், சாதி வெறியை தூண்டியதும் கருணாநிதி என்பதை மறந்து விடக் கூடாது.  கருணாநிதி முதல்வராக பொறுப்பு ஏற்றதும், எந்த அதிகாரி எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று பார்த்துப் பதவிகளில் அமர்த்துவது, பணிகளை அளிப்பது என்ற நியாமற்ற நடைமுறையை ஆரம்பித்து வைத்தவர்.  இது ஆதிக்க வெறி என்று கூறுவதா இல்லையா என்பதை ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.  தன் மானத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழக முதல்வராக இருந்த திருவாளர் பக்தவச்சலம்  1967-ல் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதை நினைவுப்படுத்த வேண்டும்.   I accept the verdict of the people. But I am sure that a virus has spread all over tamil Nadu .  May God help the people  என கூறினார், இந்த கருத்து முற்றிலும் உண்மை என்பதை ஸ்டாலின் நிரூப்பித்து வருகிறார்.

          தி.மு.க.வைப் பற்றி திராவிடப்பாதகம் என்ற ஒரு புதிய தொடரையே மா.பொ.சி. உருவாக்கிப் பயன்படுத்தினார்.  ” புலவர்களை மதித்து அவர்கள் போதனை வழி நடப்பது தமிழர் பண்பு

          புலவர்களை அவமதித்து அவர்கள் போதித்த கருத்துக்களைத் திரித்துக் கூறிப் பொருள் பறிப்பது திராவிடப்பாதகம்

          தனது பொருளை பொதுக்காரியங்களுக்குப் பயன்படுத்துவது தமிழ்ப்  பண்பு

          பொது ஸ்தாபனங்களின் பொருளைக் கவர்ந்து தனதாக்கிக் கொள்வது திராவிடப்பாதகம்

          விளைமகளையும் கற்பு நெறி வழி வாழ்த் தூண்டுவது தமிழ்ப் பண்பு

          கற்பு வழி வாழ்வோரையெல்லாம், பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரால் விலை மகளிராக்க முயல்வது திராவிடப்பாதகம்

          அறிஞர்களை அவர்கள் வாழுங்காலத்திலேயே போற்றிப் புகழ்வது தமிழ்ப் பண்பு

          அறிஞர்கள் வாழும் காலத்தில் ஒழிக ஒழிக என்ற கத்திவிட்டு இறந்த பின் வருத்தம் தெரிவிப்பது திராவிடப்பாதகம்  என கூறியதை தற்போது நினைவுப்படுத்தப் பார்க்க வேண்டும். 

- ஈரோடு சரவணன்