தி.மு.க.வின் விஷம் கலந்த விளம்பரம்

தி.மு.க.வின் விஷம் கலந்த விளம்பரம்

கடந்த ஞாயிறு (7.04.2019)  பத்திரிக்கைகளில்,  ஆதிக்கவாதிகளும் வேண்டாம்  -  அடிமைகளும் வேண்டாம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள விளம்பரம் முழுவதும் விஷம் கலந்த வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார்கள்.  தலைப்பே இவர்களின் முகமூடியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.  யார் ஆதிக்கவாதிகள், யார் அடிமைகள் என்பதை ஸ்டாலின் விளக்க முற்பட்டால், தி.மு.க.வின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் அரங்கேற்றம் நடக்கும்.    தி.மு.க.வின் வரலாறே ஆதிக்கவாதிகளின் ஆர்பாட்டமும், அடிமைகளின் எடுபிடித் தனமும் தெரியும்.   பெரியார் என்ற ராமசாமி நாயக்கரின் அடிமைகளாக வாழ்ந்தவர்கள் தான் இன்று அடிமைகளும் வேண்டாம் என்ற குரல் கொடுக்கிறார்கள். 

          தன்மானத்தை டெல்லியில் அடகு வைத்து தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய எடுபிடிகளால் இருண்ட தமிழகம் என்பது தி.மு.க.விற்கே மிகப் பெரிய பொருத்தமாகும்.   தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டெல்லியில் தன்மானத்தை இழந்து இந்திரா காந்தியின் காலடியில் சரணாகதியடைந்த சம்பவங்களை திருவாளர் ஸ்டாலின் நினைவுப்படுத்த வேண்டும். அடைந்தால் திராவிட நாடு, இல்லையோல் சுடுகாடு என வாய் சவாடல் அடித்த தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, 1962-ல் பிரிவினை தடை சட்டம் கொண்டு வந்தவுடன், திராவிட நாடு கொள்கை புதைகுழிக்கு போன வரலாறு தெரியாமல் பேசுகிறார்.  மாநில சுயாட்சி கோஷத்தை எழுப்பிய பின்னர், மத்திய அரசு தி.மு.க.வின் துணையோடு ஆட்சியிலிருந்த போது, மத்திய அரசிடம் வாதாடி மாநில சுயாட்சி என்ற அடிப்படையில் மாநிலத்திற்கு எந்த சுய அதிகாரங்களை பெற்றார்கள் என்பதை ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

          தன்மானத்தை இழந்து விட்டு பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் மன்டியிட்ட வரலாறு படைத்த கட்சி தி.மு.க.   சர்காரிய கமிஷன் அறிக்கையை காட்டியே தி.மு.க.வை தன் வழிக்கு கொண்டு வந்த கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை மறந்து விட்டு தன்மானத்தைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்.  2011-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலுக்காக தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் அண்ணா அறிவாலயத்தில்  பேச்சு வார்த்தை நடத்திய போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி  கூட்டணி கட்சியான தி.மு.க.வின் தலைமையகத்தில் அதாவது, அண்ணா அறிவாலயத்தின் மற்றொரு தளத்தில் 2ஜி ஊழலுக்காக சோதனை நடத்திய போது, தன்மானத்தை இழந்த நிலையில் மீன்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது தமிழகத்தின் மானம் கப்பல் ஏறியது ஸ்டாலினுக்கு தெரியாதா?

          2004-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர், மத்தியில் மந்திரி சபையில், குறிப்பிட்ட இலாக்கள் வேண்டும் என்பதற்காக, நிர்பந்தப்படுத்திய போது இழக்காத தன்மானம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இழந்து விட்டதா? கருணாநிதியின் கவனத்திற்கு வராமலே தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர்களுடன் காய் நகர்த்தினார்.  கனிமொழியும், ஆ.ராசாவும் கருணாநிதியைத் தவிர்த்து நீராராடியாவிடம் அமைச்சர் பதவி கேட்டு அல்லாடியதை, நீராராடியாவிடம் ஒலி நாடா பறைசாற்றிய போது தமிழகத்தின் தன்மானம் டெல்லியில் சந்தி சிரித்தது தெரியாதா?  ஆங்கிலமும், தமிழும், அரசு நிர்வாக அறிவும் அறிந்திராத அழகிரி, கருணாநிதியை கட்டாயப்படுத்தி கேபினர் அமைச்சர் பதவியை பெற்று, பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி டெல்லி ஊடகங்கள் சிரித்து விளைாடிய போது, தமிழகத்தின் தன்மானம்  கப்பல ஏறியது  ஸ்டாலினுக்கு தெரியாதா?

          இந்த தன்மான சிங்கம், துணை முதல்வராக இருந்த போது, தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் சாதிவாரியான எண்ணங்களை விட்டு விட்டு, தன்னைத் தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று போகிற இடங்களில் எல்லாம் பேசினார்.  ஆனால் வேட்பாளர் தேர்வின் போது மட்டும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர் தேர்வு நடத்துவார் இது தமிழ்நாட்டிற்கு அவமானம் என தெரியாதா?   நீயும் உன் குடும்பமும் வாரிக் குவித்தால் போதுமா? நாங்களெல்லாம் சாவதா? என்று அடிமட்டத்தில் ஏற்படும் புகைச்சலை அடக்கப்  பல்வேறு சாதிகளைச் சார்ந்த கட்சிக்காரர்கள் நூறு பேருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறு வீடாவது கட்டிக் கொடுத்தால் தான் நம்பிக்கை ஏற்படும்  அப்பொழுது தான் கட்சிக்குள் உருவாக புகைச்சல் அடங்கும் என்ற எண்ணத்தில் உருவானது தான் சமத்துவபுரம் என்பதை நினைத்து பார்த்தால் தன்மானத்தை பற்றி பேச ஸ்டாலினு்ககு எந்த அருகதையும் கிடையாது .

          மைய அரசில் அங்கம் வகித்த கருணாநிதியின் முழு இசைவோடு தானே மத்திய அரசு இராசபக்சேக்கு உதவி ஈழத்தை சுடுகாடாகியது என்பது தெரிந்த போது போகாத தமிழரின் மானம், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தவுடன் தன் மானம் போய்விட்டதா என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

          தலைப்பில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம் என்றால், யார் ஆதிக்கவாதிகள் என்பதை பார்க்க வேண்டும்.  எல்லா துறைகளிலும் தங்களின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி செய்த துரோக வரலாறு என்ன என்பதை பார்க்க வேண்டும்.   . தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையுமே கட்டுப்படுத்துவது, அல்லது பத்திரிகை துவங்குவது என்று துவங்கி இப்போது இருக்கும் எல்லா ஊடகங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது கருணாநிதி வம்சம்குமுதம் செட்டியாருக்கும் வரதராஜனுக்கும் வந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்த கருணாநிதி இரு தரப்பையுமே தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டார். செட்டியார் இனி எப்போதும் கருணாநிதிக்கு எதிராக எழுத முடியாது. வரதராஜனின் குமுதம் ரிப்போர்ட்டரோ எழுதிய அடுத்த நிமிடமே பழைய எப்..ஆர் தூசு தட்டி எடுக்கப்படும் நிலையில் நிரந்தரமான கத்தியை செட்டியாருக்கும், வரதராஜனுக்கும்  சேர்த்தே தொங்க விட்டு விட்டார் கருணாநிதிகருணாநிதியை எதிர்த்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.  துக்ளக் ஆசிரியர் சோ,  அலை ஓசை பத்திரிக்கையின் ஆசிரியர் வேலூர் நாராயணன், நாத்திகம் ராமசாமி, மக்கள் குரல் ஆசிரியர்  என பட்டியல் நீளும்.   ஆதிக்க வெறி பிடித்த தலைவர் என்றால் அது கருணாநிதியை மட்டுமே குறிப்பிடலாம்.

- ஈரோடு சரவணன்