தீக்குள் விரலை வைத்தாய்

தீக்குள் விரலை வைத்தாய்

மதங்களின் மீதான தாக்குதல் என்பது கி.மு 5ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது, ஆபிரகாமிய மதங்கள் தோன்றும் முன்பே. ஒவ்வொரு மதமும் தன் மீதான தாக்குதலையும் விமர்சனங்களையும் தாங்கியே முன்னேறிச் சென்றுள்ளது. அப்படி முன்னேறிய மதங்களே நிலைத்துள்ளனஅதை தாங்கும் வலிமையில்லாத மதங்கள் (மதம் சார்ந்த மக்கள்) ஒன்று அழிக்கப்பட்டுள்ளனர் அல்லது வேறு மதங்களை தழுவியுள்ளனர்.  

 

தாக்குதலுக்குள்ளான மக்கள் எந்த அடக்குமுறை சூழலிலும் மீண்டு எழும்போது இருமடங்கு அதீத பலத்துடன் திரும்புகின்றனர். மீண்டும் அவர்களை ஆட்கொள்வது கடினம் எனும் போக்கில் அதன் வீச்சு இருக்கும். அரேபியாவில் சிந்திச் சிதறியிருந்த (யூதர் அல்லாததனித்தனி குழுக்கள் சுமார் 500 ஆண்டுகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து மோதிக்கொண்டே இருந்துள்ளன. மோதல் என்றால் சாதாரணமாக அல்ல, அனைத்தும் கொலைவெறித் தாக்குதல்கள்அதன் பின்பே நபியின் தோன்றலில் இஸ்லாம் அதே முறையைக் கையாண்டு தன்னை நிலைநிறுத்தியது

 

பின்னாளில் சிலுவைப்போர்கள் நடைபெற்ற பொழுது இஸ்லாம் தன்னைக் காத்துக்கொள்ள அதிதீவிரமான மதச்சார்பை முன்னெடுத்தது. அதன் பொருட்டே உலகம் முழுக்க பல சாம்ராஜ்ஜியங்களை அழித்து அங்கெல்லாம் இஸ்லாத்தை நிலைநிறுத்தும் பணியை துருக்கிய, பாரசீக மன்னர்கள் தொடங்கி வைத்தனர்

 

இதே பாணி தான் கிறித்தவத்துக்கும்யூதர்களின் கொடுமையே அவர்களை கிறித்தவம் எனும் மதத்தை தோற்றுவிக்கவும், தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவே அந்த மதத்தை பரப்பவும் ஆரம்பித்தனர். அதன் விளைவே சிலுவைப்போர்களும் அதன் தொடர்ச்சியான மதமாற்றங்களும். பின்னர் அதன் நோக்கம் மடைமாறிவிட்டதுகிறித்தவம் எனும் மதம் தோற்றுவிக்கப்படும் என ஏசுவே ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார், அவரது விருப்பமும் அதுவாக இருந்ததில்லை

 

விஷயத்துக்கு வருவோம், இந்த வரலாறுகள் ஏன் இப்போது தேவை? இதைப் பேச வேண்டிய அவசியம் என்ன

 

இதே நிலை இந்தியாவிலும் நடந்தேறியது. முகலாய ஆட்சியின் தொடக்கத்திலும், அதற்கு முன்னால் நடந்த துருக்கிய, பாரசீக, மங்கோலிய, ஆப்கனிய மன்னர்களின் படையெடுப்புகளும், கொலைகளும், கொள்ளைகளும்கற்பழிப்புகளும் பெருமளவில் நடந்தேறியது வட இந்தியாவில் தான். பின்னர் முகலாய ஆட்சி தொடங்கியதும் அதன் மன்னர்கள் பலர் அதே மனப்பான்மையுடன் ஆட்சி புரிந்து, அதே வகையான கொடுமைகளை அரங்கேற்றியதை யாரும் மறுக்கமுடியாது

 

இதில் வட இந்தியா அனுபவித்த கொடுமைகள் ஏராளம். தென்னிந்தியா பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி, அல்லது அவை குறைந்த அளவில் தடுக்கப்பட்டு கொஞ்சம் பாதுகாப்பாகவே இருந்தது. சைவம் வைணவம் என சிறுபிள்ளைத்தனமான சண்டைகளையே பார்த்து வளர்ந்த இந்த தேசத்தில் அதுவரை யாரும் நினைத்துக்கூட பார்த்திராத அநியாயங்கள் எல்லாம் நடந்தேறின. உலகம் முன்பு கண்டிராத கொடுமைகள் அரங்கேறின.   

 

இந்திய மக்களுக்கு அதெல்லாம் புதிதாகவும், கொடூரமாகவும் இருந்தது. மொத்த தேசமும் அதன் எதிர்காலத்தை எண்ணி அஞ்சி நடுங்கியதுபலர் இதை உணரக்கூட நேரமில்லாமல் அழித்தொழிக்கப்பட்டனர். பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பழமை நாகரிகத்திலும் பெயர் போன இந்நாட்டில் அவ்வளவு கொடுமையிலும் அது தன்னை மீட்டெடுக்கத் தவறவில்லை. தன் அடையாளத்தை அது இழக்கவில்லை. எதையும் மறக்கவும் இல்லை. இந்த கொடுமைகள் எல்லாம் வடஇந்தியாவில் 90 சதவிகிதமும் தென்னிந்தியாவில் அதில் பாதியுமே நிகழ்ந்தது. அதனாலேயே அதன் வலியை வடக்கில் உணர்ந்த அளவுக்கு தெற்கில் நாம் உணரவில்லை அல்லது உணர அவகாசம் அளிக்கப்படவில்லை.    

 

பின் வெள்ளையர்கள் வந்து தன் பங்குக்கு சிலவற்றை நிறைவேற்றினார்கள். முன்னது நேரடித் தாக்குதல் என்றால் பின்னது மறைமுகமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல. ஏற்கெனவே ஆழமான துயர அனுபவம் இருந்ததால் வட மாநிலங்கள் ஓரளவுக்கு (தான்சுதாரித்தன. ஆனால் கிழக்கும் தெற்கும் அதை சட்டை செய்யவேயில்லை

 

பெரும்பாலான நேரங்களில் வட இந்தியாவில் ஏன் இந்து மதத்தை இந்த அளவுக்கு விடாப்பிடியாகப் பிடித்திருக்கிறார்கள், அதன் பொருட்டு ஏன் வன்முறைகள் நடக்கின்றன, பாபர் மசூதி இடிப்பு முதல் முஸாஃபர்நகர் கலவரம் வரை ஏன் வடக்கத்தியர் இப்படி இருக்கிறார்கள் என பலரும் அவர்களை காட்டுமிராண்டிகள் போல சாடுவதை நாம் பார்க்கிறோம், குறிப்பாக தமிழகத்தில். நாகரீகமற்ற மத வெறியர்கள் என அடையாளப்படுத்துகிறோம். ஏன், நீங்களோநானோ கூட அதை செய்திருக்கலாம்

 

ஆனால், பட்டவனுக்குதான் புரியும் அதன் வலி என்ன என்பது. மேலே சொன்ன வரலாறில் வடக்கு தேய்ந்தது, தெற்கு வாழ்ந்தது. அதனால் அந்த வலி நமக்கு புரியவில்லை, அதனாலே அதனை எளிதாக நாகரீகமற்ற சமூகம், மதவெறிக்கூட்டம் என சாடிவருகிறோம். இதன் பொருட்டே இங்கே (இந்துமதவெறுப்பு சித்தாந்தங்கள் காலங்காலமாக போனியாகி வருகின்றன.   

 

ஒருவேளை அதே வலியை தெற்கும் அனுபவித்திருந்தால் வரலாறு மாறியிருக்கலாம் (முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடாகவோ, கிறித்தவ நாடாகவோ, இந்து நாடாகவோ). இது நடக்காததால் தான் இங்கே மதச்சார்பின்மை நிலைக்கிறது. அதனை பயன்படுத்தியே ஒரு குறிப்பிட்ட மதத்தின் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும் தொடர்ந்து கேலிக்கும், வெறுப்புக்கும், பொய்ப்பிரச்சாரத்திற்கும் பயன்படுகிறது

 

இதனை சாதகமாக நினைத்து ஒரு கும்பல் தமது காரியங்களை நிறைவேற்றி வருவதை மனசாட்சி உள்ள எல்லா மதத்தினரும் அறிவர். சபரிமலையிலும், சிலை திருட்டிலும், திராவிடக் கொள்கையிலும், இன்னும் ஏராளமான விஷயங்களிலும் இதுதான் நடந்துவருகிறது. தொடர்ந்து பொறுமை சோதிக்கப்படுகிறது. உலக வரலாற்றில் எந்தெந்த சூழலில் ஒரு குறிப்பிட்ட மதமும் அதன் நம்பிக்கைகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அங்கெல்லாம் தாக்குதலுக்குள்ளான மக்கள் மீண்டு எழும்போது அதீத பலத்துடன் திரும்புகின்றனர். மீண்டும் அவர்களை ஆட்கொள்வது கடினம் எனும் போக்கில் அதன் வீச்சு இருமடங்கு பிரம்மாண்டமாகவே இருக்கும்

 

தமது உரிமைகளுக்காகவே மகாயுத்தங்களை நிகழ்த்திய பூமியிது. மதச்சார்பின்மையும், தேசியமும் தென்திசை வாழ் மக்களின் இரு கண்கள். அந்த கண்களைத் தோண்டிவிட்டு உயிர் வளர்க்க நினைத்தால், விளைவுகள் நிச்சயம் விபரீதமாகும்


-NewsTN ஆசிரியர் குழுவிலிருந்து