தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை - அமெரிக்கா முழு ஒத்துழைப்பு

தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை - அமெரிக்கா முழு ஒத்துழைப்பு

தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜான் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார். இந்தியா சுய பாதுகாப்பை மேற்கொள்ள முழு உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதிகளுக்கு புகழிடம் அளிப்பதையும், ஆதரவு அளிப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்க திட்டவட்டமாக கூறியுள்ளது என்று திரு போல்டன் தெரிவித்தார்.