துணிச்சலுக்கு கேரளத்தில்  பரிசு

துணிச்சலுக்கு கேரளத்தில் பரிசு

போலீஸ் நிலையத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்ட சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவனந்தபுரம் துணை கமிஷ்னர் சைத்ரா தெரேசா ஜான் அங்கு ரெய்டு நடத்தினார். அவரது அந்த நடவடிக்கையை கேரள முதல்வர் பினராய் விஜயன் சட்டசபையில் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது. அதில் அவர் சட்டத்திற்கு உட்பட்டே ரைடு நடத்தியதாக நிருபணமானது. 

முன்னதாக பெண்கள் பிரிவின் சூப்ரெண்டாக இருந்த அவரிடம், திருவனந்தபுரம் போலீஸின் சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை கமிஷ்னர் பொறுப்பு அவரிடமிருந்து உடனடியாக பறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் ஊகங்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.