துல்லிய தாக்குதல் நடக்கவில்லை காங்கிரசின் புளுகு மூட்டை அம்பலம்

துல்லிய தாக்குதல் நடக்கவில்லை காங்கிரசின் புளுகு மூட்டை அம்பலம்

கடந்த, 2004 - 2014 வரையில், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், பாக்., எல்லையை கடந்து, எந்த துல்லியத் தாக்குதலும் நடத்தப்படவில்லை' என்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தன் ஆட்சியில், பலமுறை எல்லை தாண்டி, துல்லியத் தாக்குதல் நடத்திய போதிலும், அது குறித்து, மோடி போல, தாங்கள் விளம்பரப்படுத்தியதில்லை என, சமீபத்தில் தெரிவித்திருந்தார்.ஆறு முறைஇதையடுத்து, காங்., செய்தி தொடர்பாளர், ராஜிவ் சுக்லா, 2008 முதல், பாகிஸ்தான் எல்லைக்குள், ஆறு முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருந்தார். 

இந்நிலையில், ஜம்முவைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, ரோஹித் சவுத்ரி, இந்தியா எல்லை தாண்டி நடத்திய துல்லியத் தாக்குதல் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2018ல், விண்ணப்பித்து பெற்ற விபரம், தற்போது வெளியாகியுள்ளது.அதில், '2016ல், யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம், ஒரே ஒரு முறை மட்டும், எல்லை தாண்டி துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது' என, ராணுவ அமைச்சகம் பதில் அளித்துள்ளது.முக்கிய பங்குஅந்த ஆவணத்துடன், ரோஹித் சவுத்ரியின் பேட்டியை, தனியார், 'டிவி' நிறுவனம், நேற்று ஒளிபரப்பியது. 

அதில், 'துல்லியத் தாக்குதல் நடத்தியதாக, காங்கிரஸ் பொய் பேசுகிறது' என, ரோஹித் சவுத்ரி தெரிவித்தார். இது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரம், அடுத்த இரு கட்ட தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கும் என, தெரிகிறது.