துவங்கியது வடகிழக்கு பருவ மழை

துவங்கியது வடகிழக்கு பருவ மழை

வடகிழக்கு துவக்கி விட்டதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இது தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். 

இந்த பருவ மழை காலத்தில் தமிழகம், புதுச்சேரி, தென் கேரளம், ஆந்திர பிரதேசம், ராயல சீமா ஆகிய இடங்களில் மழை பெய்யும், இந்த வருடம் சராசரியை காட்டிலும் அதிகமான மழை பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். கடலோர பகுதிகளில் கனமழையும் இருக்ககூடும் என்று பாலசந்திரன் தெரிவித்தார்.