"துவங்கியது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் மெட்ரோ "

"துவங்கியது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் மெட்ரோ "

சென்னை, வண்ணாரப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ் ..,வரையிலான மெட்ரோ ரயில் சேவையை,  'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திருப்பூரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ரயில் சேவை வண்ணாரப்பேட்டை சென்று, அங்கிருந்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வழியாக விமானநிலையத்துக்கு இயக்கப்பட்டது. 

மெட்ரோ ரயில் முதல் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டாவது திட்டத்தில்,  மாதவரத்தில் இருந்து, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில், மத்திய  - மாநில அரசுகள் இணைந்து செயல்படும். இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது, சென்னையில், வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று பிரமதர் திரு நரேந்திர மோடி கூறினார்.