தெய்வத்தை சோதித்து பார்க்க துணிந்த கேரள அரசு

தெய்வத்தை சோதித்து பார்க்க துணிந்த கேரள அரசு

மாதாமாதம் கேரள மாநிலம் சபரிமலையில் நடை திறக்கப்படுவதும், பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று வழிபடுவதும் வழக்கம். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகர ஜோதி தரிசனம் வரையில் அப்போது மட்டும் கூடுதலாக நடைதிறந்திருக்கும்.  பக்தர்கள் அமைதியாக சென்று இறைவன் ஐயப்பனை தரிசித்து வந்தார்கள். பக்தர்களின் போறாத காலம் கேரள கம்யூனிச அரசின் கண்  சபரிமலை வருமானத்தின் மீது விழுந்துவிட்டது.

அதை எப்படியாவது ஒரு சுற்றுலா தலமாக மாற்றி பணம் பண்ணும் எண்ணத்தினால், எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று வேறொருவர் தொடர்ந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டது. உச்ச நீதிமன்றத்திலும் இவர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. அதாவது, பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதே அது. 

ஆனால், கேரள மக்களின் உணர்வோ வேறு மாதிரியாக இருக்கிறது. உடனே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விட முடியுமா என்ன? மற்ற மதத்தவர் வழிப்பாட்டு விஷயங்களில் தலையிட தைரியமில்லாத கேரள அரசு சபரிமலைக்கு எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க முடிவெடுத்தது. எல்லா வயது பெண்களும் என்றால், பக்தியுள்ள பெண்கள் இல்லை, வெறும் பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் சபரிமலைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தும் மாடல் அழகிகள், ஆன்மீக நாட்டம் இல்லாதவர்கள் தான் இப்படி கேரள அரசின் ஆதரவை பெற்றவர்கள்.

இப்படி நேற்று சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடைத்திறக்கப்பட்ட போது, பூனேவிலிருந்து திருப்தி தேசாய் என்ற பெண்மணி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தே தீருவேன் என்ற தீர்மானத்துடன் கொச்சின் விமான நிலையம் வந்து இறங்கினார். இவர், தெய்வ நம்பிக்கையோடு வரவில்லை. பிரச்சனை செய்வதற்காகவே வந்தார்.

அங்கே கூடியிருந்த சுமார் 250 ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பியபடி அவர் விமான நிலையத்தை தாண்டி ஊருக்குள் நுழைய முடியாத படி அரணாக நின்றனர். அவர் வேறு வழியில்லாமல் திரும்பி போக வேண்டியதாயிற்று. ஆனால்,அவரை எதிர்த்து அமைதியான முறையில் தங்கள் எதிப்பை தெரிவித்த பக்தர்கள் அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இந்த கொடுமை போதாதென்று ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பை சேர்ந்த 56 வயது சசிகலா டீச்சரை கேரள அரசு கைது செய்து இருமுடிகட்டுடன் காவல் நிலையத்தில் வைத்துள்ளது.

ஆக, தீய நோக்கத்துடன், மரபுகளை மதிக்காமல் சபரிமலைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் கேரள அரசு, ஐயப்பனின் உண்மை பக்தர்களுக்கு தினம் தினம் விதவிதமான தொல்லைகளை கொடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்வது அமைதியான தல யாத்திரையாக இருந்த நிலை போய், பக்தர்கள் போர்க்களத்திற்கு போவது போல் இப்போது நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். தன் மாநில மக்களையே நிம்மதியாக வாழ விடாத கேரள கம்யூனிச அரசு தெய்வத்தை சோதித்து பார்க்க துணிந்து விட்டது. 

தெய்வம் நம்மை சோதித்து பார்க்க தீர்மானித்து விட்டால், அதை தாங்கும் சக்தி மானிடர்களுக்கு கிடையாது என்பது திண்ணம்.