தேசம் பாதுகாப்பாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி

தேசம் பாதுகாப்பாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயற்சி முகாம்களை இந்திய விமானப்படை அதிரடியாக தாக்கி அழித்துள்ள நிலையில், தேசம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்; தேசத்தைக் காட்டிலும் வேறெதுவும் முக்கியம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-இல் நான் என்ன சொன்னேனோ, அதை மீண்டும் நினைவுபடுத்தக் கூடிய நாள் இது என்று என் மனம் சொல்கிறது. என் நாட்டை அழிய விடமாட்டேன் என்று மண்ணின் பெயரால் உறுதியேற்கிறேன். நாட்டை தேங்கி நிற்க விடமாட்டேன். என் நாட்டை கவிழ்ந்து போக விடமாட்டேன். நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று தாய்மண்ணிற்கு உறுதியளிக்கிறேன். தேசத்தைக் காட்டிலும் இங்கு எதுவுமே முக்கியம் அல்ல. தேசத்துக்காக சேவையாற்றுபவர்களுக்கும், தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், முதன்மையான சேவகன் (பிரதமர்) சார்பில் மீண்டும் ஒருமுறை பாராட்டுகள்.