தேசிய இளைஞர் தினம்

தேசிய இளைஞர் தினம்

பாரதத்தின் பெருமையை  பாரறிய செய்த மகான் சுவாமி விவேகானதரின் 156வது அவதார தினம் இன்று. இந்திய நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரையின் மூலம் உலகறிய செய்தார். அவரது பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

"சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்றி பல்வேறு துறைகளில் நாடு முன்னணியில் திகழ அனைவரும் பாடுபடுவோம்."என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

ராமேஸ்வரத்தில் விவேகானந்தா தொண்டு நிறுவனத்தின் மூலம் புனரமைக்கப்பட்ட 30 தீர்த்த குளங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பொது மக்களில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.