தேசிய கவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்த தினம்

தேசிய கவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்த தினம்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136வது பிறந்த நாள் விழா  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து பாரதிக்கு 'ஜதி பல்லக்கு' புறப்பாடு இருக்கிறது. இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை வானவில்  பண்பாட்டு மையமும், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்து நடத்துகின்றன. திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாரதியார் இல்லத்தில் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.