தேச விரோத பேச்சு - கமல்ஹாசன் மீது நடவடிக்கை பாயுமா

தேச விரோத பேச்சு - கமல்ஹாசன் மீது நடவடிக்கை பாயுமா

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பதை அங்குள்ள மக்கள் தீர்மானிக்க வேண்டும் அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள பகுதிகளை 'ஆஜாத் காஷ்மீர்' (சுதந்திர காஷ்மீர்)  என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை குறிப்பிட , வெறும்  'ஜிஹாதி வீரர்கள்' என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில், 17 மாவட்டங்கள் அமைதியாகவே உள்ளன. மீதமுள்ள 5 மாவட்டங்களில் மட்டுமே பிரச்சனை உள்ளது, அங்கும் கூட 20% மக்கள் மட்டுமே பிரிவினை கோஷம் எழுப்புகிறார்கள், மீதமுள்ளவர்கள் இந்திய குடிமகனாகவே உணர்கிறார்கள். 70 ஆண்டுகளாக ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடக்கிறது, மக்கள் உற்சாகத்துடன் வாக்களிக்கிறார்கள்.   நமது அரசியலமைப்பு சட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு இதுவே ஒரு சான்று. எனவே பொது வாக்கெடுப்பு என்பது அபத்தம். காஷ்மீரில் உள்ள பெருவாரியான மக்களே நிராகரித்து விட்ட பொது வாக்கெடுப்பை பாகிஸ்தானும், அவர்கள் ஆதரவு பெற்ற தீவிரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புக்கள் மட்டுமே பேசுகின்றன.  இந்நிலையில் கமல்ஹாசன் அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளை, ஆஜாத் காஷ்மீர் என்று பாகிஸ்தான் மட்டுமே குறிப்பிடுகிறது. உலகில் உள்ள பிற நாடுகள் அதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றே குறிப்பிடுகின்றன.  ஆனால் கமல்ஹாசன் பாகிஸ்தான் கூறும் ஆஜாத் காஷ்மீர் என்று கூறியுள்ளது தேச விரோத செயல் என்றே பலர் குறிப்பிடுகின்றனர்.

பயங்கரவாதிகளை 'வீரர்கள்' என்று அவர் அழைத்துள்ளதும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் பேசியது தேச விரோதம் என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாகவும் உள்ளது.