தேர்தலின்போது மட்டுமே ராகுலுக்கு ஏழைகள் நினைவு வரும் - பாஜக தலைவர் அமித் ஷா

தேர்தலின்போது மட்டுமே ராகுலுக்கு ஏழைகள் நினைவு வரும் - பாஜக தலைவர் அமித் ஷா

நேரு-காந்தி குடும்பத்தில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர். அவர்கள் குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும் நாட்டில் வறுமையை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்டனர். கடும் கோடை காலத்தில் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று விடுவார். அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவரது தாயே அவரை தேடிக் கொண்டிருப்பார்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த காலத்தையும் சேர்த்து ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைக்கிறார். அப்படிப்பட்ட பிரதமர் மோடியையும் ராகுலையும் ஒப்பிட முடியாது. தேர்தலின்போது மட்டுமே ராகுல் காந்திக்கு ஏழைகள் பற்றிய நினைவு வரும். ஆனால், பிரதமர் மோடி ஓய்வே இல்லாமல் ஏழைகள், தலித்கள், நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைய பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஹரியாணா மாநிலம் சோனிபட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.