தேர்தல் முடிவுகள் தந்த பாடம்

தேர்தல் முடிவுகள் தந்த பாடம்

     நடந்து முடிந்த ஐந்து சட்ட மன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளி வந்த பின்னர் ஊடகங்கள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் என வெளியிட்டதில் காங்கிரஸ் கட்சியின் அறிக்கையும், மற்ற எதிர் கட்சிகளின் அறிக்கையும் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டவைநடைபெற்ற தேர்தல்  சட்ட மன்ற தேர்தல், இதன் முடிவுகள் வரும் 2019-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்மேலும் மோடியின் தந்திரம் இனி மேல் பலிக்காது என்றும் ஆரூடம் கணிக்கிறார்கள்.  

      பாரதிய ஜனதா கட்சி தங்களது கட்டுப்பாட்டிலிருந்த மூன்ற மாநிலங்களை இழந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மைஆனால்  மற்றவர்கள் குறிப்பிடும் படியான படு தோல்வி கிடையாது.  ராகுல் காந்தியினால் பா... தோல்வி என கருதுவதும் தவறானதுகாங்கிரஸ் கட்சியை விட நோட்டா தான் பா...வை தோற்கடித்தது. இனிமேல் மோடியின்  தந்திரம் பலிக்காது என்பதெல்லாம், எதிர்கட்சிகளின் பயத்தினால் உருவான கருத்தாகும்.  2008, 2013 ஆகிய இரண்டு சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற தொகுதிகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை பார்வையுற்றால் சில உண்மைகள் புரியும்.  மிகப் பெரிய தோல்வியை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கவில்லை.   முதலில் பாரதிய ஜனதா கட்சியானது, பாரதிய ஜனசங்கமாக இருந்த காலத்திலிருந்து மிகப் பெரிய வெற்றியை தந்த மாநிலம் மத்திய பிரதேசம்.   ஒவ்வொரு தேர்தலின் போதும் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளதுபல தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியசமான வாக்கு சதவீதம் 1 சதவீதத்திற்கும் குறைவானதாகும்

      மத்திய பிரதேசம் -  2008-ல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் 228 தொகுதிகளில் போட்டியிட்டு 37.64 சதவீத வாக்குகளை பெற்று, 146 இடங்களில் வெற்றி பெற்றதுகாங்கிரஸ் கட்சி 228 தொகுதிகளில் போட்டியிட்டு 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது, வாங்கிய வாக்குகள் 32.39 சதவீதமாகும்.  2013-ல் நடைபெற்ற தேர்தலில்  பா... 230 தொகுதிகளில் போட்டியிட்டு 44.68 சதவீத வாக்குகளை பெற்று, 165 தொகுதிகளில் வெற்றி பெற்றதுகாங்கிரஸ் கட்சி 229 தொகுதிகளில் போட்டியிட்டு, 36.38 சதவீத வாக்குகளை பெற்று 58 இடங்களில் வெற்றி பெற்றது.  2018-ல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 230 இடங்களில் போட்டியிட்டு  109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுவாங்கிய வாக்கு சதவீதம் 41.00 .  காங்கிரஸ் கட்சி 230 தொகுதிகளில் போட்டியிட்டு 40.9 சதவீத வாக்குகளை பெற்று 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.   காங்கிரஸ் கட்சியானது இந்த தேர்தலில் 2013-ல் வங்கிய வாக்கு சதவீதத்தை விட 3.52 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளதுவெற்றி பெற்ற தொகுதிகள் என எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கும் சமமான இடங்களை பெற்றுள்ளது என்பதை புரிந்து கொண்டால் , பா... மிகப் பெரிய தோல்வியை சந்திக்கவல்லை.  பாராளுமன்ற தேர்தலில் 2014ல்  பெற்ற இடங்களையே பெற முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

      2018-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பா... 121 வாக்குகள் வித்தியாசத்தில் குவாலியர் தெற்கு தொகுதியை இழந்ததுபா... 22 தொகுதிகளில்   நோட்டாவை விட மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.    Suwasra  தொகுதியில் 350 வாக்குகள் வித்தியத்தில் தோல்வியுற்றது, மேற்படி தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகள் 2976 , Jabalpur North தொகுதியில் 578 வாக்குகள் வித்தியத்தில் தோல்வியுற்றது, மேற்படி தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகள் 1209, Damoh தொகுதியில்798 வாக்குகள் வித்தியத்தில் தோல்வியுற்றது, மேற்படி தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகள் 1299,  Blaora   தொகுதியில் 826 வாக்குகள் வித்தியத்தில் தோல்வியுற்றது, மேற்படி தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகள் 1481, Rajpur   தொகுதியில் 932 வாக்குகள் வித்தியத்தில் தோல்வியுற்றது, மேற்படி தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகள் 3358   Rajanagar  தொகுதியில் 700 வாக்குகள் வித்தியத்தில் தோல்வியுற்றது, நோட்டாவிற்கு கிடைத்த மொத்த வாக்குகள் 1.4 சதவீதமான வாக்குகள்இந்த வாக்குகளில் பெரும்பாலானவை  பா...வின் வாக்குகள் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.      

      ராஜஸ்தான் -  இந்த மாநிலம் ஒரு விசித்திரமான மாநிலம், எந்த கட்சியும் தொடர்ச்சியாக இரண்டாம் முறை வெற்றி பெற்ற வரலாறு கிடையாதுதொடர்ச்சியாக வெற்றி பெற்றது என்பது 1975க்கு முந்தைய காலகட்டமே தவிர தற்போதை சூழலில் தொடர்ச்சியாக எவரும் ஆட்சி செய்வதில்லைஇதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தித்துள்ளது.  பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் 1.3 சதவீதம் நோட்டாவிற்கு விழுந்துள்ளது.   18 தொகுதிகளில் தோல்வியுற்ற பா...வின் வேட்பாளர்கள் 300 வாக்குகளுக்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார்கள்சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் பா...வின் அதிர்ப்தியாளர்கள்பல தொகுதிகளில் பா...வினர் பணிகள் செய்யாமல் முடங்கியதாலும் பல தொகுதிகள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  சத்தீஸ்கார் மாநிலம்  மட்டுமே மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதுபா...வினரின் தவறான கண்ணோட்டம் என ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஊடகங்கள் தெரிவித்துள்ளனகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி துவங்கிய அஜித் ஜோகி, காங்கிரஸ் வாக்குகளை பிரிப்பார் என எதிர்பார்த்தால் ஏற்பட்ட விளைவு என குறிப்பிட்டுள்ளன. அஜித் ஜோகி காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரிக்காமல், பா...வின் வாக்குகள் கணிசமான அளவு அஜித் ஜோகியின் கட்சிக்கு சென்றதால் ஏற்பட்ட தோல்வி.  இந்த தேர்தல் முடிவுகள் பா...வின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும், 2019 பாராளுமன்ற தேர்தலில் மீன்டும் 2014 திரும்பும் என நம்பலாம்.  

      எதிர்கட்சிகளின்  குற்றச்சாட்டுகள்  -  ரஃபேல் விமான ஊழல், மோடியில் பொய்யான வாக்குறுதியின் காரணமாகவே நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படு தோல்வியை சந்தித்தது என விமர்சனங்களை வைக்கிறார்கள்.    வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திருவாளர் டி.ராஜா, வரும் மக்களவை தேர்தலிலும் பா... படு தோல்வியை சந்திக்கும், அதிலிருந்து மீள்வது கடினம் என திருவாய் மலர்ந்துள்ளார்வேடிக்கை என்னவென்றால், நடைபெற்ற ஐந்து சட்ட மன்றதிலும்  இரண்டு கம்யூனிஸ்ட்களும் வாங்கிய மொத்த வாக்குகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவே, இவர்கள் தான், பா... மீள்வது கடினம் என்கிறார்கள்.   எளியவர்கள் ஒன்று கூடினால் பலசாலியை வீழ்த்தலாம் என கூறிய அகிலேஷ் யாதவ், எளியவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு விமர்சனம் செய்கிறார்.   இஸ்லாமியர்களை தாஜா செய்து மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தா, பாராளுமன்ற தேர்தலில் பாஜக எங்கும் இடமில்லாமல் போய்விடும் என்கிறார்அவரது மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலில் பா... காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை தள்ளிவிட்டு, மம்தாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள  வேண்டும்.

      பா... ஆட்சியில் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு மக்கள் உணர்த்தி விட்டார்கள், மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர் என்கிறார் ராகுல் காந்திஏன் மிஜோராமிலும், தொலுங்காணாவிலும் ஆட்சியை பிடிக்க இயலவில்லை.   செல்வாக்கு உள்ள மாநிலம் என தம்பட்டம் அடித்துக் கொண்ட ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வாக்கு வங்கி ஏற்படவில்லைதெருவிற்கு தெரு தான் ஒரு பிராமணன் என பிரச்சாரம் செய்தது மக்கள் நன்மைக்காகவா?   மத்திய பிரதேசத்தில் எல்லா தொகுதியிலும் உள்ள இஸ்லாமியர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என மசூதி மசூதியாக அலைந்த கமல்நாத்  வெற்றி பெற்றது, இஸ்லாமியர்களின் வாக்குகளை மட்டுமே நம்பினார்கள் என்றால் மிகையாகாது

      ஸ்டாலின், உள்ளிட்ட தமிழக தலைவர்களின் விமர்சனங்கள்ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல்  முடிவுகளை வைத்து தமிழகத்தின் தானை தளபதியாக நினைத்துக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் கொடுத்த அறிக்கையும், அவரது தமக்கை கனிமொழி கொடுத்த அறிக்கையும் கீழ் தரமானது.  பா...விற்கு எதிரான நமது போருக்கும், பிரம்மாண்டக் கூட்டணிக்கும் இந்த வெற்றி வலு சேர்க்கும் என்கிறார் திருவாளர் ஸ்டாலின்.   இன்னும் பிரிவினை மன போக்கிலேயே அறிக்கையை விடுகிறார்எந்த போருக்கு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ஸ்டாலின், பா... ஆட்சியில் அதிகார சுகம் கண்டவர்கள் விடும் செய்தி கீழ் தரமானதாக இருக்கிறதுகட்சியின் மூத்த தலைவர்களை கண்டு கொள்ளாமல், தி.மு..விலும் ஒரு ராபர்ட் வதோரவாக உருவாகியுள்ள சபரீசனை அருகில் வைத்துக் கொண்டு ஆலபனம் செய்கிறார்.

      ராகுல் காந்தி தனது மாபெரும் பிரச்சாரத்தின் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளார் என்கிறார் திருமாவளவன்பிரச்சாரத்தின் மூலம் என்றால்மத்திய பிரதேசத்தில் சாதியின் பெயரை கூறி பிரச்சாரம் செய்தததை ஆதரிக்கிறாரா என்பதும், அந்த பிரச்சாரத்தை பா... செய்தால் தமிழன துரோகி என குற்றம் சாட்டுவதும் சந்தர்ப்பவாதம் என்பதை காட்டுகிறது.   எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்த 13 ஆண்டுகள் தி.மு..வின் கருணாநிதியின் சம தான பேதம், தண்டம் என சகல முறையிலும் முயற்சி செய்து வெற்றி முடியாத தி.மு.. மோடியை விமர்சனம் செய்வது வேடிக்கையாக இருக்கிறதுகாங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்பது மோடியின் ஆணவம் என கூறும் ஸ்டாலின், கீழ்தரமான முறையில் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க முடியாது ஏன் என்றால் மக்கள் சேவை என்பதை விட குடும்ப சேவை என்பதே முதன்மையான திட்டம் என்பதால் ராகுல் காந்தியை விமர்சிக்க முடியாது. தி.மு.. ஆட்சியில் நடந்த ஜனநாயக படுகொலை என்ன என்பதை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தால் ஸ்டாலின் வாய் திறக்க வாய்பில்லை.

      ஐந்து மாநிலத் தேர்தல் சொல்லும் செய்தி பா... வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறதுபின்னடைவைச் சந்தித்திருக்கிறதுஆனால், காங்கிரஸ் மாபெரும் வெற்றி  அடைந்திடவில்லைநிச்சயம் ராகுல் அலை கிடையாது

-    - ஈரோடு சரவணன்