தைப்பூசத திருநாளில் தமிழெடுத்து பாடுவோம்

தைப்பூசத திருநாளில் தமிழெடுத்து பாடுவோம்

இந்து மத சம்பிரதாயத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள் விசேஷமானதாகும். சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தோடு பௌர்ணமி வரும் போது சித்திரா பௌர்ணமி, வைகாசி மாசம் விசாக நக்ஷத்திரத்தில் சந்திரன் இருக்கும் நாள் வைகாசி விசாகம் என்று தொடர்ந்து தை மாதம் பூச நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் போது 'தை பூசம்' கொண்டாடப்படுகிறது. 

'தை பூசம்' தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் குமரன் இருக்கும் தலங்களில் எல்லாம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக பழனியிலும், திருச்செந்தூரிலும். 

தைப்பூசத்தன்று தான் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று எல்லா உயிர்களின் நல்வாழ்வை விரும்பிய வடலூர் வள்ளலார் பெருமான் ஜோதி வடிவில் இறைவனுடன் கலந்தார். எனவே, தைப்பூசத்தன்று வடலூரிலும் 'ஜோதி தரிசனம்' நடைபெறுகிறது.

இந்த வருடம் 'தை பூசம்'  நாளை மறுநாள் ஜனவரி 21 (திங்கட்கிழமை) வருகிறது. அன்றைய தினம் கந்த கடவுளை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவோமாக.