தை பிறக்கும் நாளை...

தை பிறக்கும் நாளை...

உத்திராயணத்தின் தொடக்க நாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அறுவடைத்திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை இந்த வருடம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்,"உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும்  பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

நாளை மறு நாள் கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் 'மாட்டு பொங்கல்' கொண்டாடப்படுகிறது.  வீரர்கள் காளைகளை அடக்கும் 'ஜல்லிக்கட்டு போட்டிகள்' நாளை அவனியாபுரத்திலும், 17ம் தேதி அலங்கநல்லூரிலும் நடை பெற உள்ளன. இதற்காக காளைகளும், வீரர்களும் போட்டிகள் நடைபெறும் இடங்களும் தயாராகி வருகின்றன. 

மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஒன்றாக வெளியே சென்று உணவு உண்டு மகிழும் 'காணும் பொங்கல்' வரும் 17ம் தேதி கொண்டாடப்படுள்ளது. அதிகளவிலான மக்கள் கூடும் இடங்களான சென்னை கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றில் கூட்டத்தை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

NewsTN  வாசகர்களுக்கு பொங்கல்  நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது