தொகுதி மக்களின் மனங்களை வென்ற பாஜக எம்.எல்.ஏ

தொகுதி மக்களின் மனங்களை வென்ற பாஜக எம்.எல்.ஏ

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. எனினும், ஷியோப்பூர் மாவட்டம் விஜயப்பூர் தொகுதியில் பாஜகவை சேர்ந்த சீதாராம் ஆதிவாசி முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 55 வயதாகும் இவர் தன் மனைவியுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். 

இவர் மீது அன்பு கொண்ட இவரது தொகுதிவாசிகள் ரூ.100 முதல் ரூ.1000 வரை தங்கள் வசதிக்கேற்ப பணம் போட்டு அவருக்கு இரு அறைகள் கொண்ட வீட்டை கட்டி வருகின்றனர். "எங்களுக்காக எப்போதும் உதவ தயாராக இருக்கும் எங்கள் எம்.எல்.ஏக்கு நங்கள் வீடு கட்டித்தருகிறோம்." என்கின்றனர் தொகுதிவாசிகள்.

அவரோ, தன் முதல் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிடுவேன் என்று கூறிவருகிறார்.