தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை

தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் பெற்றது. 

நான்காம் நாளான இன்று மழைகாரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.