தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை

தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச்சந்தை உச்சத்தை அடைந்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று உளநாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

இது பங்குச்சந்தையில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் நிப்ட்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டும் உச்சத்துடனே முடிவடைந்தன.

இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.