தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் "தீபாவளி"பரிசு

தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் "தீபாவளி"பரிசு

சிறு குறு தொழில்முனைவோருக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை  தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகப்படுத்தினார். இதை தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் "தீபாவளி பரிசு " என்று அவர் குறிப்பிட்டார். சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோர் ஒரு கோடி ரூபாய் வரை எளிதாக கடன் பெற முடியும். 

1கோடி ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு ஜி.எஸ்.டியில் இரண்டு சதவிகிதம் விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியா பொருளாதாரத்தில் சக்தி மிக்க நாடாக இருப்பதற்கு சிறு, குறு தொழில் முனைவோரே காரணம் என்று அவர் புகழாரம் சூட்டினார்.