நகப்பூச்சு  கூடாது

நகப்பூச்சு கூடாது

இஸ்லாமிய பெண்கள் தொழுகையின் போது நெயில் பாலீஷ் என்னும் நகப்பூச்சு அணியக்கூடாது என்றும், அதற்கு பதிலாக மருதாணி வைத்துக்கொள்ளலாம் என்று தருல் உலும் தியோபந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தடைவிதித்துள்ளது.  இந்த அமைப்பு ஏற்கனவே, இஸ்லாமிய பெண்கள் புருவத்தை திருத்துவதும், தலைமுடியை கத்தரிப்பதும் கூடாது என்று கூறியிருந்தது.

அதுமட்டுமல்லாமல், ஆண்கள் அரை டிராயர் அணிந்து விளையாடும் கால் பந்தாட்டத்தை இஸ்லாமிய பெண்கள் பார்க்கக்கூடாது என்றும் இந்த அமைப்பு இந்த ஆண்டின் துவக்கத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.