நகரும் பாலம்

ராமேஸ்வரம் தீவை நாட்டின் முக்கிய நிலப்பகுதியோடு இணைக்கும் ராமேஸ்வரம் ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது இந்த பாலம் காலாவதியாகிவிட்டது. எனவே, புதிய பாலம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாலம் நவீன தொழிற்நுட்பங்களுடன், கடல் காற்றை தாங்க கூடியதாக கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.250 கோடியாகும். இந்த பாலத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.