நடக்குமா...நடக்காதா? எப்போ நடக்கும்?

நடக்குமா...நடக்காதா? எப்போ நடக்கும்?

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மறைவினால் அவர் எம்.எல்.ஏ வாக இருந்த திருவாரூர் சட்டபேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழக டெல்டா பகுதிகளை தாக்கிய கஜா புயலினால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னமும் திருவாரூர் மீளவில்லை என்றும், பலர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை இழந்துள்ளனர் என்றும் எனவே, திருவாரூர் தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்  கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை  விசாரித்த உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்றும்,இடைத்தேர்தல் விஷயத்தில்  தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. எனினும், தனி மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.