நம் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமி ஸ்ரீராமரின் மகன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நம் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமி ஸ்ரீராமரின் மகன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நம் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமி ஸ்ரீராமரின் மகன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

சீதாதேவி விஸ்வாமித்திரரின் ஆசிரமத்தில் இருக்கும்போது ஒரு குழந்தையை குழந்தையை பெற்றெடுத்தார்.  அந்தக் குழந்தைக்கு நவம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஒருமுறை ஆற்றிலிருந்து நீர் எடுக்க சென்ற சீதாதேவி, 

குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு விசுவாமித்திரரை கேட்டுக்கொண்டார்.  குழந்தை தூங்கிக்கொண்டிருக்க விசுவாமித்திர தவத்தில் ஈடுபட்டிருந்தார்.  திரும்பி வந்த சீதாதேவி முனிவரின் தியானத்தை தவத்தை கலைக்க விரும்பாமல் எதுவும் பேசாமல் குழந்தையை எடுத்து வந்துவிட்டார்.  பின்பு கண் விழித்த விசுவாமித்திரர் குழந்தைகள் காணாமல் வழங்கினார். உடனே தனது தவ வலிமையால் தர்பை புல்லைக் கொண்டு அதே போன்றதொரு குழந்தையை உருவாக்கினார்.

சிறிது நேரத்தில் குழந்தைகள் ஆசிரமத்திற்குள் மீண்டும் வந்தார்.   அவை அனைத்தும் இருவருக்கும் விளங்கியது. இந்த குழந்தையையும் தனது குழந்தையாக  பாவித்து சீதாதேவி வளர்க்க முடிவு எடுத்தார். புல்லில் இருந்து தோன்றியதால் குசன் என்று  பெயரிட்டனர்.

இருவருமே ஒற்றுமையாக வளர்ந்தனர். சில ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமர் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பி, அதன் பொருட்டு யாக குதிரையை நாடெங்கும் அனுப்பினார். யாருடைய குதிரை என தெரியாமல் லவனும் - குசனும் சிறைப்பிடிக்க, ராமரின் படைகள் இந்த சிறுவர்களோடு போர் செய்தது. லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன் உட்பட அனைவரும் தோற்றுப்போயினர். யாருக்குமே இவர்கள் ஸ்ரீராமரின் பிள்ளைகள் என்பது தெரியாது.  ராமரும் உண்மை அறியாத நிலையில் அவர்களுடன் போர் செய்தார், இறுதியில் அவர்களை வீழ்த்த பிரம்மாஸ்திரத்தை எடுத்த போது, தக்க தருணத்தில் வந்த சீதா தேவி உண்மையை விளக்கினார்.

இரு பாலகர்களையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் அரச தர்மத்தின் படி ஒருவருக்கு மட்டுமே முடிசூட முடியும் என்பதால், அந்த ஒருவரை தேர்ந்தெடுக்க பரீட்சை வைத்தார்.   அக்னி மூட்டி அதை தாண்டி இருவரும் வரவேண்டும் என்பதே அது. லவன் தாண்டி வந்து விட, குசனின் உடல் மட்டும் கருப்பாகி விட்டது. 

லவனை அயோத்திக்கு இளவரசனாகவும்,  எல்லைப் பகுதிகளின் தளபதியாக குசனையும் நியமித்தார்.  நெருப்பில் உடல் கருப்பான காரணத்தால் கருப்பண்ணன், கருப்பசாமி என்று பக்தர்கள் குசனை அழைக்கிறார்கள்.  பூசாரிகள் கருப்பசாமியை ‘தர்பையில் பிறந்தவன’ என்று பாடி வழிபடுவதும் இதனால் தான்.