நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் துவங்கியது. குடியரசு தலைவர் உரையின் சில துளிகள்

*இந்தியா உலகிலேயே 6வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 

*மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தொழிற் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெருகியுள்ளன. உலகிலேயே இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.

*உத்திர பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் ராணுவ தளவாட உற்பத்தி வழி தடங்கள் உருவாக்கப்படுள்ளன. இதனால், நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

*நம் நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் தொழிற் வல்லுனர்களின்  அயராத உழைப்பால் நாடு நவீன தொழிற்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது. 'ககன்யான்' திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

*2014ம் ஆண்டு முதல் பிரதம மந்திரியின் ஸௌபாக்கிய திட்டத்தின் மூலம் 2கோடியே  47 லட்சம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில்  13,000 கிராமங்கள் கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவை. அதிலும் 5000 கிராமங்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களாகும்.

*வடகிழக்கு மாநிலங்களில் ரயில் வசதிகள் மேம்படுத்த பட்டுள்ளதன் மூலம் அங்கு சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

*இந்த நான்கரை ஆண்டுகளில் 300 புதிய பாஸ்போர்ட் கேந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் பாஸ்போர்ட் பெற பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.

*பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.இதனால், ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

*13 கோடி வீடுகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

*கடந்த நான்கு மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் 'ஆயூஷ்மான் பாரத்' திட்டத்தின் மூலம் மருத்தவ வசதி பெற்றுள்ளனர். 

*2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு தரமான விதைகளும், விளை பொருட்களுக்கு நல்ல சந்தை வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

*கங்கை ஒரு நதி மட்டுமல்ல நமக்கு தாய் போன்றது. எனவே, கங்கை நதியை தூய்மைபடுத்த 'நமாமி கங்கே' திட்டத்திற்கு ரூ.25,500  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

*இந்தியா எல்லா நாடுகளுடனும் நல்ல நட்புறவையும், இணக்கத்தையும் பேணி வருகிறது. அதே சமயத்தில் 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' மூலம் நமது பலத்தையும் நிரூபித்துள்ளோம்.

*நாட்டின் பாதுகாப்புதுரையினருக்கு வாழ்த்துக்கள் அவர்களது அயராத உழைப்பினால் தான் நாட்டின் பாதுகாப்பும், உள் நாட்டு அமைதியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

*நம் நாட்டின் இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரசு 'முத்தலாக் தடை' சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அயராது பாடுபட்டு வருகிறது.

*பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

*2022ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த உள்ளோம். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது ஜி-20 மாநாட்டையும் நாம் நடத்த இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

*பொதுதேர்தல் என்ற மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நாடு விரைவில் கொண்டாட உள்ளது. முதல் முறையாக வாக்களித்து இதில் பங்கு கொள்ள இருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். 

* நாட்டின் 130 கோடி மக்களின் அன்புடனும் ஆசிகளுடனும் இந்த அரசு புதிய இந்தியாவை நிர்மாணிக்கும் பயணத்தை துவக்கியுள்ளது.

குடியரசு தலைவரின் உரைக்கு பின் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.