நாடு திரும்பிய நடராஜர்.!

நாடு திரும்பிய நடராஜர்.!

37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1982 ஆம் ஆண்டு கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோவிலில் இருந்து நடராஜர் சிலை திருடப்பட்டது.

அச்சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதை பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை கண்டறிந்து இந்தியாவுக்கு கொண்டுவந்தது. தற்போது நடராஜர் சிலை நீதிமன்ற உத்தரவுப்படி குலசேகரமுடையர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.