நாட்டுக்காக வாழும் பிரதமர் - என் குடும்பத்தினரைவிட நாட்டுக்கு அதிக மதிப்பை பெற்றுத் தந்தவர் மோடி

நாட்டுக்காக வாழும் பிரதமர் - என் குடும்பத்தினரைவிட நாட்டுக்கு அதிக மதிப்பை பெற்றுத் தந்தவர் மோடி

"என் குடும்பத்தைச் சேர்ந்த பிரதமர்களைக் காட்டிலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அதிக மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளார்' என்று பாஜக எம்.பி. வருண் காந்தி கூறினார். மேலும் என் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, பெரியப்பா ராஜிவ் ஆகியோர், இதற்கு முன், பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்களை விட, தற்போதைய பிரதமர் மோடி தான், சர்வதேச அளவில், நம் நாட்டுக்கு அதிக பெருமை சேர்த்துள்ளார். பிரதமர் மோடி, நம் நாட்டுக்காகவே வாழ்கிறார் என்றார்.

மிகச் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள மோடி, ஏழ்மை நிலையை நன்கு உணர்ந்தவர். கடந்த 5 ஆண்டுகாலத்தில், அவரது ஆட்சியில் எந்தவொரு ஊழலும் நிகழவில்லை. அரசியல் எவ்வளவு கறை படிந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் இறங்கும் எவரும் 6 மாதங்களுக்குள்ளாக ஏதேனும் ஒரு தீவிர குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். ஆனால், மோடிக்கு எதிராக அவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. ஏனெனில், அவர் யாருக்காகவும் ஊழலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. அவர் நாட்டுக்காக மட்டுமே வாழ்கிறார் என்று வருண் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதி பிரச்சாரத்தின் போது பேசினார்.