நாட்டு மக்களை ஏமாற்றும் ராகுல் காந்தி

நாட்டு மக்களை ஏமாற்றும் ராகுல் காந்தி

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ராகுல் காந்தி பேசி வருகிறார்.  ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 40 வீரர்களுக்கு வீர தியாகிகள் அந்தஸ்தை பிரதமர் மோடி அளிக்கவில்லை.  அதே நேரத்தில் நாட்டுக்காக எதையும் தராத, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அளித்துள்ளார்.  புதிய இந்தியாவை வரவேற்போம்  என கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். 

          திருவாளர் ராகுல் காந்தியின் வார்த்தையில் கூற வேண்டுமானல், நேரு குடும்பத்தில் நாட்டிற்காக தியாம் செய்தவர்கள் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேருவை தவிர வேறு எவர் தியாகம் செய்தார்கள் என கூற வேண்டும்.  திருமதி இந்திரா காந்தி அவரது மகன்கள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, இவர்களின் இருவரது மகன்கள் ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா வதேரா போன்றவர்கள் என்ன தியாகம் செய்தார்கள்.   ராகுல் காந்தியின் தயார் திருமதி சோனியா காந்தியின் தேச பற்று என்ன என்பதையும், நாட்டுக்காக அவர் செய்த தியாகம் என்ன என்பதையும் ராகுல் காந்தி விளக்க வேண்டும்.  நேருவின் குடும்பத்தை மட்டுமே வைத்து தியாகம் செய்தவர்கள் என புலம்புவது கொள்ளையடிப்பதற்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  

          மோடி அம்பானிக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ரஃபேல் விமான ஒப்பந்தத்தை கொடுத்தாக கூறும் ராகுல், இதே அம்பானியின் குடும்பத்திற்கு கொட்டி கொடுத்த ஒப்பந்தங்கள் எவ்வளவு என்பதை தற்போது பேச தயாரா இருக்கிறாரா என்பதையும் அலச வேண்டும்.

             ரிலையன்ஸ் ஊழல்  --முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி..ஜி. அறிக்கை தெரிவிக்கிறதுஇந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளதுசி..ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை  முன் வைக்கிறதுமுதலாவதாக  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்..எல்) கெய்ரன் நிறுவனங்களுக்கு அரசு, எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்ததுஇரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு, மறு டெண்டர் விடுவதற்கு பதிலாக அரசு ஆர்..எல். மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கே ஒப்பந்த்த்தை நீட்டித்துத் தந்ததுமூன்றாவதாக  ஆர்..எல். நிறுவனம், தனது மூலதன செலவுத் தேவைகளை 117 சதவீதம் அதிகரித்துக் ( 2004 -2006 கால கட்டத்தில்) காட்டியதுஅது அரசுக்கு வந்திருக்க வேண்டிய வருவாய்இதில் மோசடி நடந்துள்ளது என்பது, கேஜி 6 படுகையில் மே மாதம் 2004 முதல் 2006  அக்டேபர் வரையிலான கால கட்டத்தில் ரிலையன்ஸின் மூலதன செலவுகள் அதிகமாயிருப்பதை சி..ஜி கேள்வி கேட்டுக் துளைத்திருக்கிறதுஅதாவது துவக்க காலத்தில் மேபாட்டுத் திட்டத்தின் 2.39 பில்லியன் டாலர்  மூலதனச் செலவு பிடிக்கும் என ரிலையன்ஸ் கணக்கிட்டதுஆனால் 2006 அக்டேபரில் அதனை 5.19 பில்லியன் டாலராக ஆக்கிவிட்டது. இதில் தான் முறைகேடு நடந்துள்ளதுசி..ஜி யின் அறிக்கையின் படி முதல் மதிப்பீட்டுக்கும் இரண்டாவது மதிப்பீட்டுக்கும் உள்ள அதிரடி வித்தியாசம், அரசின் நிதிநிலையைப் பாதிக்கக்கூடியது. என்று குறிப்பிட்டுள்ளது

                இந்த முறைகேட்டின் காரணமாக ஆதாயம் அடைந்தவர்கள் ரலையன்ஸ் அம்பானி என்பதும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதும் நிதா்சனமான உண்மையாகும்.  இது நாட்டிற்காக அம்பானி செய்த தியாகத்திற்கு கொடுத்த பரிசா.

            திருவாளர் ராகுல் காந்தியின் தாயார் திருமதி சோனியா காந்தி நாட்டிற்காக செய்த தியாகம் என்ன என்பதையும், தனது தந்தை ராஜீவ் காந்தி ஆற்றிய தொண்டு என்ன என்பதையும் விவரிக்க வேண்டும்.  வெறும் இந்திரா காந்தியின் தந்தை வழி சொந்தங்கள் செய்த தியாகத்தை பெரோஷ் கந்தி குடும்பத்தினர் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள கூடாது.   1975-ல் அவரச நிலை பிரகடன படுத்திய பின்னர் நடத்திய அட்டூழியங்களின் சூத்தரதாரி சஞ்சய் காந்தி,  இதுதான் நாட்டிற்கு செய்த தியாகமா?.  அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி எதற்காக வெளி நாடு சென்றார் என்பதை எப்பொழுதாவது கூறியிருப்பாரா?   1977-ல் இந்திரா காந்தி தோல்வியுற்று,  ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பாதுகாப்பு இல்லை என கூறி திருமதி சோனியா காந்தி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன்  இத்தாலி தூதரகத்தில் தஞ்சம் புகுந்த செயல் இந்திய திரு நாட்டிற்கு செய்த தியாகமா.    1971-ல் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை போரில் இந்திய ராணுவம் ஈடுபட்ட போது, தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளுக்கு கூட விடுப்பு கிடையாது என்ற விதியிருந்தும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியாக பணியாற்றிய   ராஜீவ் காந்திக்கு மட்டும்  விடுப்பு எடுத்துக் கொண்டு, யுத்தம் முடியும் வரை  இத்தாலிலேயே தங்கியிருந்தது தான் தேசத்திற்கு செய்த தியாகமா என்பதை  நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

          கொச்சைப்படுத்தும் விதமாக அம்பானிக்கு விமான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி,  திரு அனில் தீருபாய் அம்பானிக்குச் சொந்தமான ஸ்வான் காபிடல் கம்பெனியின் பங்குகள் டி.பி.ரியாலிடி கம்பெனிக்குச் சாதகமாக திடீரென மாற்றம் செய்யப்பட்டனஇந்த மாற்றம் தொலை தொடர்ப்பு துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாகவே செய்யப்பட்டது இதன் காரணமாக 2ஜி ஊழல் ஏற்பட்டது.  இதை செய்தவர் ஆ.ராஜா.  தி.மு.க. தேசத்திற்கு என்ன தியாகம் செய்தார்கள், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ய முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி கொடுத்து,   போபர்ஸ் ஊழலில் கொள்ளையடித்த குத்ரோஷி, இந்திய தேசத்திற்கு என்ன தியகத்தை புரிந்தார் கோடிக் கணக்கில் கமிஷன் வழங்கப்பட்டது.   ஆகவே தியாகத்திற்கு பொருள் புரிந்து பேச வேண்டும்.

          பிறவியிலேயே பெரும் கோடீஸ்வரரா முரசொலி மாறன் மகன்கள், கோடிக் கணக்கில் சொத்து எவ்வாறு சேர்ந்தது,  மத்தியில் அமைச்சர் பதவியை பெற்ற பின்னர் மாட  மாளிகைளும் , கூட கோபுரங்களும் முளைத்து, தியாகத்தின் அடிப்படையிலா அல்லது கொள்ளையடித்தாலே.  அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு மற்றவர்களை மிரட்டிய சம்பவங்களும் உண்டு .  இன்று அவர்களுடன் உட்கார்ந்து கொண்டு தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

          திருவாளர் ராகுல் காந்தி புல்வாமா தாக்குதலில் பலியானவர்களுக்கு வீர தியாகிகள் அந்தஸ்தை பிரதமர் மோடி அளிக்கவில்லை என புலம்புகிறார்.   நாடு விடுதலை பெற்ற பின்னர் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு காங்கிரஸ்  அரசு தியாகிகள் அந்தஸ்தை அளித்ததா என்பதை ராகுல் காந்தி பேச வேண்டும்.   எல்லையில் மரணமடைந்த வீரர்களின் உடல்கள் கூட சொந்த கிராமத்திற்கு கொண்டு வராமல், அவர் உடுத்திய உடை மட்டுமே கொடுத்த காலம் மாறி, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல், உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது என்பதை மறந்து விட்டு ராகுல் காந்தி பேசுகிறார்.  

- ஈரோடு சரவணன்