நான்கு மாத குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை

நான்கு மாத குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை

விருத்தாசலத்தை சேர்ந்த செல்வராஜ் ஜெயந்தி தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழுந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த இந்த குழந்தை மூச்சு திணறலாலும் அவதிப்பட்டது. எனவே, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, குழந்தைக்கு இதய வால்வ்களில் மிகவும் அரிதான  புஞ்சை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரி செய்ய மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த நவம்பர் 26ம் தேதி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இப்போது குழந்தை நல்ல முறையில் உடல்நிலை தேறி வருகிறது.