'நான் தலித் என்பதால் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது'

'நான் தலித் என்பதால் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது'

அண்மையில் கர்நாடகாவில் உள்ள தாவணகெவில் தலித் அரசியல் விடுதலைமாநாடு நடைபெற்றது. இதில், அம்மாநில துணைமுதல்வர் பரமேஷ்வர், 21-ம் நூற்றாண்டிலும் இந்திய சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுகிறது பேசினார். காலம் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் தலித்துகளின் மீதான சாதி கொடுமை மட்டும் மாறாமல் இருக்கிறது. அரசியலில் பெரிய பதவியை அடைந்தாலும், சாதி ரீதியாக பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. 

நான் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தபோது, தேர்தலில் வெற்றிப் பெற்றும் எனக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.நான் தலித் என்பதால் மூன்றுமுறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. காங்கிரஸில் சிலர் தலித் தலைவர்களை வளர விடாமல் தடுப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகே, நான் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனை தடுக்கவும் சிலர் முயற்சித்தனர் என்று கூறினார்.

பாஜக விமர்சனம்

இது குறித்து பாஜக மாநிலதலைவர் எடியூரப்பா கூறுகையில், ‘‘காங்கிரஸில் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. தேவராஜ் அர்ஸ் காலத்தில் பசவலிங்கப்பாவுக்கு முதல்வர் பதவி தரப்பட‌வில்லை. 6 முறை எம்.எல்.ஏ.வாகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்த ரங்கநாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. இதேபோல, மல்லிகார்ஜூன கார்கே முதல்வராவதையும் பலர் தடுத்தனர். பரமேஷ்வர் முதல்வராவதை சித்தராமையா தடுத்தார். ஆனால், பாஜகவோ தலித் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியுள்ளது'' என்றார்.