நான் யார் என்று காட்டுவேன் - பொங்கிய வைகோ

நான் யார் என்று காட்டுவேன் - பொங்கிய வைகோ

சென்ற வாரம்  திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மதிமுக தரப்பில் நான்கு தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். திமுக தரப்பில் பம்பரம் சின்னத்தில் நிற்பதென்றால் 1 சீட்,  உதயசூரியன் சின்னத்தில் நிற்பதென்றால் 2 சீட்கள் தருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அப்போது தான் 6% வாக்குகள் மற்றும் 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்ற்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும், எனவே 4 நிச்சயம் வேண்டும் என மதிமுக தெரிவித்துள்ளதாம். திமுக தரப்பில் 'சரி, தளபதி, அண்ணனுடன் பேசுவார்' என்று மட்டும் சொன்னார்களாம். 

இது குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த வைகோ மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம். விஜயகாந்தை இழுக்க திமுக திடீர் முயற்சி என்று தெரிய வர,  தேமுதிக வந்துவிட்டால் ஸ்டாலின் நம்மை சட்டை செய்யமாட்டார் என்று  யூகித்த வைகோ, தன கட்சிக்காரர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவுள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்பே, தான் கழற்றிவிடப்பட வாய்ப்பு உள்ளதை உணர்ந்த வைகோ, "எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பேன், நஷ்டம் திமுக வுக்குத்தான் தான்" என்று கட்சியினர் மத்தியில் பேசியுள்ளார் வைகோ.

இது அறிந்த திமுக தலைமை, மதிமுகவினரை பேச அழைத்தது.  தாம் கூட்டணியை முறித்ததாக இருக்கக்கூடாது, வேண்டுமானால் அவரே வெளியேறட்டும் என்கிற நிலையில் திமுக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10ல் அவர்கள் 5ல் வெற்றிபெற்றாலே பெரிய விஷயம். வைகோ, திருமா எல்லாம் போட்டியிடும் தொகுதிகளில், வெற்றி பெற்றால் லாபம் என்கிற ரீதியில்தான் திமுக உள்ளது.

இன்று நடைபெறும் மதிமுக உயர்நிலை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.