நாய் கறி சாப்பிட ரெடியா?

நாய் கறி சாப்பிட ரெடியா?

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு சப்ளை  செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ நாய் கறி கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தரமற்ற இறைச்சி தமிழகத்திற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் இன்று ஜோத்பூர் ரயிலின் சரக்கு பெட்டிகள் மூலம் வந்து இறங்கிய  20 பார்சல்களில் இருந்த இறைச்சியை ஆய்வு செய்தனர். 

அப்போது, அவை நாய் இறைச்சி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு அழிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் புலான் உணவு விரும்பிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.